/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
கோவை விமான நிலையம் ரொம்ப 'பிஸி'; தொடர்ந்து அதிகரிக்கும் பயணிகளின் எண்ணிக்கை
/
கோவை விமான நிலையம் ரொம்ப 'பிஸி'; தொடர்ந்து அதிகரிக்கும் பயணிகளின் எண்ணிக்கை
கோவை விமான நிலையம் ரொம்ப 'பிஸி'; தொடர்ந்து அதிகரிக்கும் பயணிகளின் எண்ணிக்கை
கோவை விமான நிலையம் ரொம்ப 'பிஸி'; தொடர்ந்து அதிகரிக்கும் பயணிகளின் எண்ணிக்கை
ADDED : நவ 25, 2024 10:50 PM

கோவை; கோவையிலிருந்து விமானம் வாயிலாக பல்வேறு பகுதிகளுக்கு செல்லும் பயணிகளின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது.
கோவை சர்வதேச விமான நிலையத்தில் உள்ளூர் மற்றும் வெளியூர் பயணிகளின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. அக்., மாதம் முதல், தினமும், 30 விமானங்கள் இயக்கப்பட்டு வருகின்றன. இதையடுத்து கோவை விமான நிலையத்தில் இருந்து வெளியூர்கள், வெளிநாடுகளுக்கு செல்லும் பயணிகளின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது.
நேற்று முன்தினம் ஒரே நாளில் அதிகபட்சமாக, 64 விமான சேவைகள் வழங்கப்பட்டன. இதில் தலா, 32 வருகை, புறப்பாடு அடங்கும். ஒரே நாளில், 1,195 சர்வதேசம், 8,832 உள்நாடு என, 10 ஆயிரத்து, 027 பயணிகள் வந்து, சென்றுள்ளனர். தலா, 28 உள்நாட்டு விமானங்கள், தலா நான்கு சர்வதேச விமானங்கள் வந்து சென்றன.
மூன்றாவது முறையாக, ஒரே நாளில், 10 ஆயிரத்துக்கும் அதிகமான பயணிகள் எண்ணிக்கை பதிவானது குறிப்பிடத்தக்கது. குறிப்பாக, ஒரே நாளில் அதிகளவாக, 1,200 சர்வதேச பயணிகள் விமான நிலையத்தை பயன்படுத்தியுள்ளனர். சமீபத்தில், இன்டிகோ நிறுவனம் அபுதாபி, சிங்கப்பூருக்கு விமானங்களை இயக்கியது குறிப்பிடத்தக்கது. சர்வதேச விமானங்களின் எண்ணிக்கை அதிகரித்ததே இதற்கு காரணம். மேலும், கோவைக்கு, 85 சதவீத சர்வதேச பயணிகள் வந்த நிலையில், இங்கிருந்து, 92 சதவீத பயணிகள் உள்நாட்டுக்குள் பயணம் செய்தது குறிப்பிடத்தக்கது.
வரும், 30 ம் தேதி முதல், சீரடிக்கு விமான சேவை, இன்டிகோ விமான நிறுவனம் மேலும் ஒரு சர்வதேச சேவையை துவங்க உள்ள நிலையில் இந்த எண்ணிக்கை மேலும் உயரும் என, எதிர்பார்க்கப்படுகிறது. இதேபோல் சரக்கு போக்குவரத்தும் அதிகரித்துள்ளது.

