/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
'ரோடு சைக்கிளிங் சாம்பியன்ஷிப்' கோவை வீராங்கனைக்கு வெண்கலம்
/
'ரோடு சைக்கிளிங் சாம்பியன்ஷிப்' கோவை வீராங்கனைக்கு வெண்கலம்
'ரோடு சைக்கிளிங் சாம்பியன்ஷிப்' கோவை வீராங்கனைக்கு வெண்கலம்
'ரோடு சைக்கிளிங் சாம்பியன்ஷிப்' கோவை வீராங்கனைக்கு வெண்கலம்
ADDED : பிப் 05, 2025 11:50 PM

கோவை: பீகாரில் நடந்த 'ரோடு சைக்கிளிங் சாம்பியன்ஷிப்' போட்டியில், கோவை வீராங்கனை வெண்கலம் வென்று பெருமை சேர்த்துள்ளார்.
பீகார் மாநிலம், பாட்னாவில் இந்திய பள்ளிகள் விளையாட்டு குழுமம்(எஸ்.ஜி.எப்.ஐ.,) சார்பில், 'ரோடு சைக்கிளிங் சாம்பியன்ஷிப்' போட்டி நடந்தது. இதில், 17, 19 உட்பட பல்வேறு வயதுக்குட்பட்ட பிரிவுகளில், 200க்கும் மேற்பட்ட மாணவியர் பங்கேற்றனர். இதில், கோவையை சேர்ந்த ஹாசினி, 17 வயதுக்குட்பட்டோர் பிரிவில் வெண்கல பதக்கம் வென்று, தமிழகத்துக்கு பெருமை சேர்த்துள்ளார்.
தனிநபர் பிரிவில் வெற்றி பெற்ற வீராங்கனையை, தமிழ்நாடு சைக்கிளிங் சங்கம் மற்றும் கோவை மாவட்ட சைக்கிளிங் சங்க நிர்வாகிகள் பாராட்டினர்.