/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
சைக்கிளிங் போட்டியில் பதக்கம் குவிக்கும் கோவை வீராங்கனைகள்
/
சைக்கிளிங் போட்டியில் பதக்கம் குவிக்கும் கோவை வீராங்கனைகள்
சைக்கிளிங் போட்டியில் பதக்கம் குவிக்கும் கோவை வீராங்கனைகள்
சைக்கிளிங் போட்டியில் பதக்கம் குவிக்கும் கோவை வீராங்கனைகள்
ADDED : மே 10, 2025 12:34 AM
கோவை: 'கேலோ இந்தியா யூத் கேம்' இரண்டாம் நாள் போட்டியிலும், கோவை வீராங்கனைகள் பதக்கங்கள் வென்றுள்ளனர்.
பீகார் மாநிலத்தில், 'கேலோ இந்தியா யூத் கேம்' போட்டிகள் நேற்று முன்தினம் துவங்கி நான்கு நாட்கள் நடக்கிறது. சைக்கிளிங் போட்டியில் மகாராஷ்டிரா, டில்லி, கேரளா, கர்நாடகா உட்பட பல்வேறு மாநிலங்களை சேர்ந்த, 250க்கும் மேற்பட்ட வீரர், வீராங்கனைகள் பங்கேற்றுள்ளனர்.
இதில், கோவை வீராங்கனைகள் பரிசுகளை தட்டிவருகின்றனர். முதல் நாளில், சைக்கிளிங் தனிநபர் 'டைம் டிரையல்' போட்டியில், கோவையை சேர்ந்த தபிதா வெண்கலம் வென்றார்.
குழு போட்டியிலும் தபிதா, ஜெய் ஜோட்சனா ஆகிய கோவை வீராங்கனைகளும், துாத்துக்குடியை சேர்ந்த நிரைமதி அடங்கிய அணியினர் வெண்கலம் வென்றனர்.
இரண்டாம் நாள் போட்டியில், தனி நபர் 'கெரின் ரேஸ்' போட்டியில் தபிதா வெள்ளி பதக்கமும், நிறைமதி வெண்கல பதக்கமும் வென்று தமிழகத்துக்கு பெருமை சேர்த்துள்ளது. வெற்றி பெற்ற வீராங்கனைகளை, கோவை மாவட்ட சைக்கிளிங் சங்க நிர்வாகிகள் பாராட்டினர்.

