/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
கோவை - பெங்களூரு உதய் ரயில் 5ம் தேதி முதல் தினமும் இயக்கம்
/
கோவை - பெங்களூரு உதய் ரயில் 5ம் தேதி முதல் தினமும் இயக்கம்
கோவை - பெங்களூரு உதய் ரயில் 5ம் தேதி முதல் தினமும் இயக்கம்
கோவை - பெங்களூரு உதய் ரயில் 5ம் தேதி முதல் தினமும் இயக்கம்
ADDED : மார் 01, 2024 07:25 AM
சென்னை: கோவை - கே.எஸ்.ஆர்., பெங்களூரு உதய் விரைவு ரயில் வரும் 5ம் தேதி முதல்தினமும் இயக்கப்படும் என தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது.
கோவை - கர்நாடகா மாநிலம் கே.எஸ்.ஆர்., பெங்களூரு இடையிலான உதய் விரைவு ரயில் சேவைபுதன்கிழமை தவிர்த்து, வாரத்தில் ஆறு நாட்களும் இயக்கப்படுகிறது.
பயணியர் கூட்டம் அதிகரித்து வருவதால், இந்த ரயிலை தினமும் இயக்க வேண்டுமென பல்வேறு தரப்பினரும் ரயில்வேக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதற்கிடையே, உதய் விரைவு ரயில் சேவை தினமும் இயக்க ரயில்வே வாரியம் ஒப்புதல் அளித்துள்ளது. அதன்படி, வரும் 5ம் தேதி முதல் இந்த விரைவு ரயில் தினமும் இயக்கப்படும் என தெற்கு ரயில்வே நேற்று தெரிவித்து உள்ளது.