/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
கோவை குண்டுவெடிப்பு குற்றவாளி மேலும் இரு கொலை வழக்கில் கைது
/
கோவை குண்டுவெடிப்பு குற்றவாளி மேலும் இரு கொலை வழக்கில் கைது
கோவை குண்டுவெடிப்பு குற்றவாளி மேலும் இரு கொலை வழக்கில் கைது
கோவை குண்டுவெடிப்பு குற்றவாளி மேலும் இரு கொலை வழக்கில் கைது
ADDED : ஜூலை 25, 2025 01:43 AM
கோவை,:கோவை குண்டுவெடிப்பு வழக்கு தொடர்பாக, 28 ஆண்டுகளுக்கு பின் கைது செய்யப்பட்ட டெய்லர் ராஜா, மேலும் இரண்டு கொலை வழக்கில் கைது செய்யப்பட்டார்.
கோவையில், 1998, பிப்.,14 ல், பல்வேறு இடங்களில் நடந்த தொடர் குண்டு வெடிப்பு சம்பவத்தில், 58 பேர் கொல்லப்பட்டனர். வழக்கில் தொடர்புடைய முஜிபுர் ரகுமான், டெய்லர் ராஜா, 51, ஆகியோர் தொடர்ந்து தலைமறைவாக இருந்தனர்.
கர்நாடக மாநிலம், விஜயபுரா பகுதியில் வசித்த டெய்லர் ராஜாவை, 28 ஆண்டுகளுக்கு பின், கடந்த 11ம் தேதி, தீவிரவாத தடுப்பு பிரிவினர் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
டெய்லர் ராஜாவை ஐந்து நாட்கள் காவலில் எடுத்து விசாரித்த தீவிரவாத தடுப்பு பிரிவினர், மீண்டும் கோவை சிறையில் அடைத்தனர்.
இதற்கிடையில், அவரது நீதிமன்ற காவல் முடிந்ததை தொடர்ந்து, சிறையிலிருந்த படி, வீடியோ கான்பரன்ஸ் வாயிலாக நேற்று ஜே.எம்., 5 கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டார். தொடர்ந்து, ஆக., 7 வரை காவலை நீட்டித்து மாஜிஸ்திரேட் உத்தரவிட்டார்.
மதுரை மத்திய சிறை உதவி ஜெயிலர் ஜெயபிரகாஷ், 1997ல் கொல்லப்பட்ட வழக்கிலும், நாகூரில் 1996ல், ஷகிதா என்ற பெண் கொல்லப்பட்ட வழக்கிலும், டெய்லர் ராஜாவை போலீசார் தேடி வந்தனர்.
இரண்டு கொலை வழக்கில், பிடிவாரன்டில் நேற்று அவர் கைது செய்யப்பட்டார். இந்த வழக்குகளில் டெய்லர் ராஜாவை, மதுரைக்கு அழைத்துச் சென்று விசாரிக்க, போலீசார் கோர்ட்டில் மனு தாக்கல் செய்ய உள்ளனர்.