/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
கோவை குண்டுவெடிப்பு கைதிக்கு காணொலியில் காவல் நீட்டிப்பு
/
கோவை குண்டுவெடிப்பு கைதிக்கு காணொலியில் காவல் நீட்டிப்பு
கோவை குண்டுவெடிப்பு கைதிக்கு காணொலியில் காவல் நீட்டிப்பு
கோவை குண்டுவெடிப்பு கைதிக்கு காணொலியில் காவல் நீட்டிப்பு
ADDED : ஆக 08, 2025 08:42 PM
கோவை; 28 ஆண்டுகளுக்கு பிறகு கைது செய்யப்பட்ட, கோவை குண்டுவெடிப்பு கைதிக்கு, காணொலியில் காவல் நீட்டிப்பு செய்யப்பட்டது.
கோவையில்,1998, பிப்.,14ல், பல்வேறு இடங்களில் நடந்த தொடர் குண்டு வெடிப்பு சம்பவத்தில் தொடர்புடைய டெய்லர் ராஜா,51, 28 ஆண்டுகளாக தலைமறைவாக இருந்தார்.
கர்நாடக மாநிலம், விஜயபுரா பகுதியில் வசித்த டெய்லர் ராஜாவை, கடந்த மாதம் 11ம் தேதி, தீவிரவாத தடுப்பு பிரிவினர் கைது செய்து, சிறையில் அடைத்தனர்.
இதற்கிடையில், அவரது நீதிமன்ற காவல் முடிந்ததை தொடர்ந்து, சிறையிலிருந்தபடி, காணொலி வாயிலாக ஜே.எம்:5, கோர்ட்டில் நேற்று ஆஜர்படுத்தப்பட்டார். வரும் 21 வரை அவரது காவலை நீட்டித்து, மாஜிஸ்திரேட் வெர்ஜின் வெர்ஸ்டா உத்தரவிட்டார்.