UPDATED : அக் 04, 2026 12:00 AM
ADDED : அக் 03, 2026 05:14 PM
அ நிறம் | அளவு
கோவை: மாவட்டங்களுக்கு இடையே 23 வயதுக்குட்பட்ட மாணவர்களுக்கான கிரிக்கெட் போட்டி மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் நடந்தது.
கோவையில் நடந்த இறுதிப்போட்டியில் திருப்பூர் அணியினர் 32.1 ஓவரில் 94 ரன் எடுத்தனர். எதிரணியின் சூயஸ் திவேதி 4, தாசிஸ் கண்ணன் 3 விக்கெட் எடுத்தனர். அடுத்து விளையாடிய கோவை அணியினர் 38.3 ஓவரில் 96 ரன் எடுத்து வெற்றி பெற்றனர். வெற்றி பெற்ற அணியினரை கோவை மாவட்ட கிரிக்கெட் சங்க நிர்வாகிகள் பாராட்டினர்.
