UPDATED : அக் 04, 2026 12:00 AM
ADDED : அக் 03, 2026 05:14 PM
அ நிறம் | அளவு
சுந்தராபுரம்: சுந்தராபுரம், மதுக்கரை மார்க்கெட் சாலையிலுள்ள செங்கப்ப கோனார் திருமண மண்டபத்தில், ஸ்ரீதேவி, பூதேவி தாயார்கள் சமேத வேங்கடேச பெருமாள் தேவதைகளுக்கு திருக்கல்யாண உற்சவம் நேற்று காலை 7:20க்கு முகூர்த்தக்கால் நடுதலுடன் துவங்கியது. தொடர்ந்து குத்துவிளக்கேற்றுதல், சீர்வரிசை அழைப்பு நடந்தன.
இதையடுத்து, திருக்கல்யாண உற்சவத்தை பொள்ளாச்சி ஆனந்த பாலாஜி குழுவினர் நடத்தினர். மதியம் அன்னதானமும், தொடர்ச்சியாக சுமதியின் வீணை இசை கச்சேரியும் நடந்தன.
இரண்டாயிரத்திற்கும் மேற்பட்டோர் பெருமாளை வணங்கிச் சென்றனர். அறக்கட்டளையின் துணை தலைவர் சண்முகம் நன்றி கூறினார்.
தமிழ்நாடு குலாலர் மன்ற மாநில துணை தலைவர் ராஜகோபால், மாவட்ட தலைவர் செந்தில்குமார் உள்பட பலர் பங்கேற்றனர்.
