/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
'மெட்ரோ ரயில்' திட்டத்தை செயல்படுத்தும் முன் விவசாயிகள் ஆலோசனை கேட்கப்படும் உறுதியளித்தார் கோவை கலெக்டர்

ADDED : டிச 28, 2024 12:33 AM
கோவை; கோவையில், மெட்ரோ ரயில் திட்டம் செயல்படுத்துவது தொடர்பாக, விவசாயிகளின் ஆலோசனை ஏற்றுக்கொள்ளப்படும் என்று, கோவை கலெக்டர் கிராந்திகுமார் கூறினார்.
கோவை கலெக்டர் அலுவலகத்தில், விவசாயிகள் குறைதீர்ப்புக்கூட்டம், கலெக்டர் கிராந்திகுமார் தலைமையில் நடந்தது. மாவட்ட வருவாய் அலுவலர் ஷர்மிளா முன்னிலை வகித்தார்.
இக்கூட்டத்தில், கவுசிகா நீர்க்கரங்கள் அமைப்பு தலைவர் செல்வராஜ் பேசியதாவது:
சென்னை மெட்ரோ ரயில் நிறுவன மேலாண் இயக்குனர் சித்திக், சமீபத்தில் கோவைக்கு வருகை தந்தார். அவரது தலைமையில், முக்கிய அதிகாரிகள் பங்கேற்ற சிறப்புக்கூட்டம் நடந்தது.
அதில் நான்கு அசோசியேஷன் நிர்வாகிகள் மட்டும் பங்கேற்று, ஆலோசனை தெரிவித்துள்ளனர். கோவையின் வளர்ச்சிக்கு தீவிரமாக செயல்படும், 16 அமைப்புகள் உள்ளன. அதில் ஒரு அமைப்புக்குக்கூட, அழைப்பு விடுக்கப்படவில்லை.
மெட்ரோ ரயில் திட்டம் தொடர்பாக, பல விஷயங்களை, நாங்கள் சொல்வதற்கு தயாராக இருந்தோம்; எங்களுக்கு வாய்ப்பு வழங்கப்படவில்லை.
இவ்வாறு, அவர் பேசினார்.
இதற்கு பதிலளித்த கலெக்டர் கிராந்திகுமார், ''நீங்கள் சொல்வது போல, அமைப்பினரோ, தன்னார்வலர்களோ மெட்ரோ ரயில் மேலாண் இயக்குனர் சித்திக்கை சந்திக்கவில்லை. மெட்ரோ ரயில் திட்டம் செயல்படுத்துவது குறித்து, விரைவில் கூட்டம் நடத்தப்படும்.
அதில் தன்னார்வலர்கள், அமைப்பு நிர்வாகிகள் உள்ளிட்ட கோவையிலுள்ள பல்வேறு அமைப்புகளுக்கு அழைப்பு விடுக்கப்படும்.
கருத்துக்கள் பதிவு செய்யப்படும். மெட்ரோ ரயில் நிறுவன மேலாண் இயக்குனரின் முடிவுப்படி, இறுதி முடிவுகள் எடுக்கப்படும்.
கட்டாயம் விவசாயிகளுக்கு முக்கிய பிரதிநிதித்துவம் கொடுத்து அழைக்கப்படுவர். உங்களது நியாயமான கருத்துக்கள் ஏற்றுக்கொள்ளப்படும்.
இவ்வாறு, கலெக்டர் கிராந்திகுமார் கூறினார்.