/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
சிறிய கைத்தறி பூங்கா துவங்க கோவை கலெக்டர் அழைப்பு
/
சிறிய கைத்தறி பூங்கா துவங்க கோவை கலெக்டர் அழைப்பு
ADDED : பிப் 18, 2024 12:00 AM
கோவை:சிறிய அளவில் கைத்தறி பூங்கா அமைக்க, தொழில் முனைவோருக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
பாரம்பரிய மிக்க கைத்தறி நெசவு தொழிலை பாதுகாத்து, கைத்தறி துணி ரகங்கள் உற்பத்தியை பெருக்க, தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அதன் ஒரு பகுதியாக, அரசு நிதியுதவியுடன், 10 இடங்களில், சிறிய அளவில் கைத்தறி பூங்கா அமைக்க திட்டம் தீட்டப்பட்டுள்ளது.
இதன்படி, 100 கைத்தறிகள் அமைத்து, அதற்கு தேவையான தொழிற்கூடங்கள், குடோன், மின்சாரம், குடிநீர் இணைப்பு, கழிவு நீர் இணைப்பு உள்ளிட்ட வசதிகள் உருவாக்கப்பட்டு, தொழில் முனைவோர் பயன்படுத்தும் வகையில், பொது வசதி மையங்கள் ஏற்படுத்தப்படுகின்றன. விருப்பம் உள்ளவர்கள், இம்மையத்தில் உற்பத்தியை மேற்கொண்டு பயன் அடையலாம்.
சிறிய அளவிலான கைத்தறி பூங்காக்கள் மூலம் உற்பத்தி செய்து, நெசவாளர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்குவதோடு, தொழிலில் முன்னேற்றம் அடைந்து, ஏற்றுமதி செய்ய வாய்ப்புள்ளது. விருப்பம் உள்ளவர்கள், www.loomworld.in என்ற இணைய தள முகவரியில், வரும் 22ம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் என, கலெக்டர் கிராந்திகுமார் தெரிவித்துள்ளார்.