/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
இளையராஜா ஆர்மோனியத்தின் பழுது நீக்கிய கோவை நிறுவனம்
/
இளையராஜா ஆர்மோனியத்தின் பழுது நீக்கிய கோவை நிறுவனம்
இளையராஜா ஆர்மோனியத்தின் பழுது நீக்கிய கோவை நிறுவனம்
இளையராஜா ஆர்மோனியத்தின் பழுது நீக்கிய கோவை நிறுவனம்
ADDED : ஜூன் 21, 2025 12:49 AM

இசைக்கு ஏழு ஸ்வரங்கள். ஆனால், இசை ரசிகர்களுக்கு ஐந்து ஸ்வரங்கள் தான். அது, இளையராஜா. எல்லாவித உணர்ச்சிகளுக்கும், இளையராஜா பாடல்கள் அங்கே இதம் தரும். அவரின் மிகப்பெரிய சொத்து ஆர்மோனியப்பெட்டி.
முதல் இசையில் துவங்கி இன்று வரை, இளையராஜாவின் இசையில் ஆர்மோனியத்துக்கு என தனி இடம் உண்டு. அந்த ஆர்மோனியம் கோவையில் தயாரிக்கப்பட்டது. தன் அண்ணன் கோவையில் வாங்கிக் கொடுத்த ஆர்மோனியம், இன்றும் தன்னுடன் இருப்பதாக அவரே பெருமிதம் தெரிவித்துள்ளார்.
அப்படிப்பட்ட ஆர்மோனியத்தை, கோவையில் அவருக்கு பழுது நீக்கி தந்தவர், கோவை பூமார்கெட்டை சேர்ந்த சுப்ரமணியம்.
பாவலர் வரதராஜன் நிகழ்ச்சிகளுக்கு, கோவை வரும் இளையராஜா, தனது ஆர்மோனியத்தை இவர் கடையில் தான் பழுது நீக்க கொடுத்துள்ளார் என, பெருமிதம் பொங்க கூறுகிறார், சுப்ரமணியத்தின் மகன் முத்துக்குமார்.
அவர் கூறியதாவது:
எனது தந்தை பூமார்க்கெட் பகுதியில், 'கல்யாணி மியூசிக்கல்ஸ்' பெயரில் கடை நடத்தி வந்தார். எனது தந்தை ஆர்மோனியம் இசைப்பார். அதை தயாரித்து விற்பனையும் செய்து வந்தார்.
ஆர்மோனியத்தில் சிறப்பாக 'டியூனிங்' செய்வார். அது இளையராஜாவுக்கு மிகவும் பிடிக்கும். அதனாலேயே, அவர் கோவை வரும் போதெல்லாம், அவரது ஆர்மோனியத்தை சர்வீஸ்க்கு கொடுப்பார்.
இசைஞானி எங்கள் கடையில் அமர்ந்த நாற்காலியை, தற்போது வரை பராமரித்து வருகிறோம். அந்த கால கட்டத்தில் ஆர்மோனிய பெட்டி, ரூ.30 முதல் ரூ.40 வரை விற்பனையானது.
கோவை ஐந்து மூக்கு பகுதியில், பொன்னையா ஆசாரியிடம் இளையராஜா, ஆர்மோனியம் வாங்கியுள்ளார். கோவையில் அவர் வாங்கிய ஆர்மோனியத்தை, இன்றும் பாதுகாத்து வருவது பெருமையாக உள்ளது.
இன்று எலக்ட்ரானிக் இசைக்கருவிகள் வந்து விட்டன. இருப்பினும், பாரம்பரிய இசைக்கருவிகளுக்கு என வரவேற்பு உள்ளது.
முதற்கட்ட பயிற்சியாளர்கள், பாரம்பரிய இசைக்கருவிகளில் தான் இசைக்க பழகமுடியும். அதனால், இசைக்கருவிகள் விற்பனை அதிகரித்து வருகிறது. இன்று, இளைய தலைமுறையினரிடம் இசைக்கருவிகள் வாசிப்பதில் அதிக ஆர்வம் உள்ளது.
இன்று எலக்ட்ரானிக் இசைக்கருவிகள் வந்து விட்டன. இருப்பினும், பாரம்பரிய இசைக்கருவிகளுக்கு என வரவேற்பு உள்ளது.
முதற்கட்ட பயிற்சியாளர்கள், பாரம்பரிய இசைக்கருவிகளில் தான் இசைக்க பழகமுடியும். அதனால், இசைக்கருவிகள் விற்பனை அதிகரித்து வருகிறது.