/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
மூன்றாவது டிவிஷன் போட்டி கோவை காம்ரேட்ஸ் வெற்றி
/
மூன்றாவது டிவிஷன் போட்டி கோவை காம்ரேட்ஸ் வெற்றி
ADDED : டிச 12, 2025 05:01 AM
கோவை: கோவை மாவட்ட கிரிக்கெட் சங்கம்(சி.டி.சி.ஏ.,) சார்பில் மூன்றாவது டிவிஷன் போட்டி, பி.எஸ்.ஜி., ஐ.எம்.எஸ்., உள்ளிட்ட மைதானங்களில் நடக்கிறது. கோவை காம்ரேட்ஸ் அணியும், கோவை லெஜண்ட்ஸ் கிரிக்கெட் அகாடமி அணியும் மோதின. பேட்டிங் செய்த கோவை காம்ரேட்ஸ் அணியினர், 50 ஓவரில், 9 விக்கெட் இழப்புக்கு, 199 ரன் எடுத்தனர்.
வீரர் பாரதி ராஜா, 48 ரன் எடுத்தார். எதிரணி வீரர் சிவ சூர்ய பிரகாஷ் மூன்று விக்கெட் வீழ்த்தினார். அடுத்து களம் இறங்கிய கோவை லெஜண்ட்ஸ் அணியினர், 50 ஓவரில் எட்டு விக்கெட் இழப்புக்கு, 190 ரன் எடுத்தனர். வீரர் முகமது ஹதிபா, 55 ரன் எடுத்தார். எதிரணி வீரர் கருப்புசாமி மூன்று விக்கெட் வீழ்த்தினார்.

