ADDED : மே 14, 2025 11:57 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கோவை; திடீரென பெய்த மழையால் கோவையின் பல்வேறு பகுதிகளிலும், குளிர்ந்த காலநிலை ஏற்பட்டது.
கோவை, திருப்பூர், நீலகிரி, ஈரோடு, கிருஷ்ணகிரி, தர்மபுரி, தேனி மற்றும் திண்டுக்கல் ஆகிய 8 மாவட்டங்களில் நேற்று, ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக, வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது.
கோவையில் கடந்த சில தினங்களாக, வெயிலின் தாக்கம் அதிகமாக உள்ளது. இந்நிலையில் நேற்று மாலை கோவையின் பல்வேறு பகுதிகளிலும், சாரல் மழை பெய்தது. சிவானந்தா காலனி, காந்திபுரம், ரத்தினபுரி, சித்தாபுதுார் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளிலும் மழை பெய்தது. இதன் காரணமாக வெப்பம் தணிந்து, குளிர்ந்த காலநிலை நிலவியது. வெயிலின் தாக்கத்தால் அவதிப்பட்டு வந்த பொதுமக்கள், மகிழ்ச்சி அடைந்தனர்.