/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
கோவை குற்றாலம் மீண்டும் திறப்பு
/
கோவை குற்றாலம் மீண்டும் திறப்பு
ADDED : ஜூலை 12, 2025 01:15 AM

தொண்டாமுத்தூர்; கோவை குற்றாலம் நீர்வீழ்ச்சி, 47 நாட்களுக்குப்பின், சுற்றுலா பயணிகளுக்காக மீண்டும் திறக்கப்பட்டது.
போளுவாம்பட்டி வனச்சரகத்திற்குட்பட்ட மேற்கு தொடர்ச்சி மலையில், கோவை குற்றாலம் நீர்வீழ்ச்சி அமைந்துள்ளது. இந்த நீர்வீழ்ச்சி வனத்துறை கட்டுப்பாட்டில் உள்ளது. கடந்த மே மாதம், கோவை மேற்கு தொடர்ச்சி மலையில் பெய்த தொடர் கன மழை காரணமாக, கோவை குற்றாலம் நீர்வீழ்ச்சியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.
இதனையடுத்து, சுற்றுலா பயணிகளின் பாதுகாப்பு கருதி, கடந்த மே, 25ம் தேதி முதல் சுற்றுலா பயணிகளுக்கு வனத்துறையினர் தடை விதித்தனர்.
தொடர் மழை காரணமாக, சுற்றுலா பயணிகளுக்கானக்கான தடை நீடித்தது. இந்நிலையில், தற்போது மேற்கு தொடர்ச்சி மலையில் மழைப்பொழிவு குறைந்து, கோவை குற்றாலம் நீர்வீழ்ச்சியில் நீர்வரத்து சீரானது.
இதனையடுத்து, நேற்று முதல் சுற்றுலா பயணிகளுக்கு விதிக்கப்பட்டிருந்த தடையை வனத்துறையினர் நீக்கினர்.
47 நாட்கள் தடைக்குப்பின், நேற்று கோவை குற்றாலம் திறக்கப்பட்டதால், சுற்றுலா பயணிகள் குடும்பத்துடன் வந்து குளித்து மகிழ்ந்தனர்.