ADDED : ஜன 13, 2026 10:31 AM
அ நிறம் | அளவு
கோவை: தமிழகத்தில் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறையில் உதவி இயக்குனர் அந்தஸ்தில் பணிபுரியும் அதிகாரிகள் 53 பேர், நேற்று வெவ்வேறு இடங்களுக்கு இட மாறுதல் செய்யப்பட்டனர்.
கோவை மாவட்டத்தில் பணிபுரியும், கோவை மேற்கு மாவட்டம் ஊராட்சிகள் மற்றும் தணிக்கை உதவி இயக்குனர் பஷீர் அகமது, நீலகிரி மாவட்டத்துக்கு மாற்றப்பட்டு உள்ளார். இவருக்கு பதிலாக, விருதுநகர் மாவட்டத்தில் மாவட்ட ஊராட்சி செயலராக பணிபுரியும் செந்தில்வேல் நியமிக்கப்பட்டு உள்ளார்.
கோவை கிழக்கு மாவட்டம் ஊராட்சிகள் மற்றும் தணிக்கை உதவி இயக்குனர் கமலகண்ணன், திருப்பூர் மாவட்டத்துக்கு மாற்றப்பட்டு உள்ளார்.
திருப்பூரில் பணிபுரியும் பாலசுப்ரமணியன், கோவைக்கு இட மாற்றம் செய்யப்பட்டிருக்கிறார்.
