ADDED : மார் 26, 2026 10:10 PM
ஆன்மிகம்
பங்குனி உத்திர திருவிழா
* பேரூர் பட்டீசுவரசுவாமி கோவில் யாகசாலை பூஜை, பஞ்சமூர்த்திகள் திருவீதி உலா, காலை 9 மணி. யாகசாலை பூஜை மாலை 5:30 மணி, திருவீதி உலா இரவு 8 மணி.
ராமநவமி பிரம்மோற்சவம்
* ராம்நகர் கோதண்டராமர் கோவில் சதுஸ்தானார்ச்சனம் காலை 7 மணி. தீர்த்தவாரி, பகல் 12 மணி. மஹாபூர்ணாஹூதி மாலை 5 மணி. குதிரை வாகனத்தில் வீதி உலா இரவு 7.00 மணி.
சஹஸ்ரநாம பாராயணம்
* ராம்நகர், அபிநவ வித்யா தீர்த்த ப்ரவசன மண்டபதில், ஸ்ரீ விஷ்ணு சஹஸ்ரநாம பாராயணம் காலை 9 மணி.
பாபா தினவிழா
* போத்தனூர் ஸ்ரீ யோக சாயிபாபா ஆலயத்தில் ராம நவமி மற்றும் பாபா ஜென்ம தின விழா காலை 4:30 மணி முதல் 8:30 மணி வரை.
கீதை உபதேசம்
* ஆர்.எஸ்.புரம் பாரதீய வித்யா பவனில் மாலை 6 மணி முதல் 7 மணி வரை கீதை உபதேசம். கல்வி
ஆண்டுவிழா
* சுகுனா பொறியியல் கல்லூரியில் 14வது ஆண்டு விழா, ஸ்போர்ட்ஸ் காம்ப்ளக்ஸ் காலை 7 மணி.
பட்டமளிப்பு விழா
* அவினாசிலிங்கம் மகளிர் பல்கலையின் 37வது பட்டமளிப்பு விழா காலை 11 மணி. சிறப்பு ஐஐடி மெட்ராஸ் இயக்குனர் காமகோடி.
