/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
கோவை மாவட்ட நா.த., நிர்வாகிகள் தி.மு.க.,வில் சேர்ந்தனர்
/
கோவை மாவட்ட நா.த., நிர்வாகிகள் தி.மு.க.,வில் சேர்ந்தனர்
கோவை மாவட்ட நா.த., நிர்வாகிகள் தி.மு.க.,வில் சேர்ந்தனர்
கோவை மாவட்ட நா.த., நிர்வாகிகள் தி.மு.க.,வில் சேர்ந்தனர்
ADDED : நவ 27, 2024 07:18 AM
கோவை: கிருஷ்ணகிரி, விழுப்புரம், சேலத்தை தொடர்ந்து, தற்போது கோவை மாவட்டத்தை சேர்ந்த நாம் தமிழர் கட்சி நிர்வாகிகளும் கூண்டோடு விலகி, அமைச்சர் செந்தில் பாலாஜி முன்னிலையில், தி.மு.க.,வில் இணைந்தனர்.
சமீப நாட்களாக, நாம் தமிழர் கட்சியில் இருந்து மாநில நிர்வாகிகள், மாவட்டச் செயலர்கள் விலகி வருகின்றனர். சமீபத்தில், சேலம் மேற்கு மாவட்ட செயலர் ஜெகதீஷ், அக்கட்சியிலிருந்து விலகினார்.
கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் பேச்சில் ஈர்க்கப்பட்டு, அக்கட்சியில் ஆர்வமாக சேர்ந்து வந்தவர்கள், தற்போது அவரது தன்னிச்சயைான செயல்பாடுகளை குற்றம்சாட்டி, படிப்படியாக விலகி வருகின்றனர்.
அந்த வரிசையில் நேற்று, கோவை மாவட்ட நாம் தமிழர் கட்சி மாவட்ட செயலர் ராமச்சந்திரன் தலைமையில், 100க்கும் மேற்பட்டோர், அக்கட்சியிலிருந்து விலகி, அமைச்சர் செந்தில் பாலாஜி முன்னிலையில், தி.மு.க.,வில் இணைந்தனர்.