தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/பரம்பிக்குளத்தில் சுற்றுலா பயணிகள் தங்க குடில்

பரம்பிக்குளத்தில் சுற்றுலா பயணிகள் தங்க குடில்

பரம்பிக்குளத்தில் சுற்றுலா பயணிகள் தங்க குடில்


ADDED : மே 23, 2011 10:55 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : மே 23, 2011 10:55 PM


Follow on Google
அ நிறம் | அளவு

ஆனைமலை : ஆனைமலை அடுத்த பரம்பிக்குளம் புலிகள் காப்பக பகுதியில் சுற்றுலா பயணிகள் தங்குவதற்காக இயற்கையுடன் இணைந்து தங்கும் குடில்கள் அமைக்கப்பட்டுள்ளன.

பரம்பிக்குளம் வனப் பகுதியில் பாதுகாப்பு அதிகமாக இருந்தாலும் சுற்றுலாப் பயணிகளை கவரும் வகையில் தங்கும் இடங்களும் அமைக்கப்பட்டுள்ளன.

பள்ளி கல்லூரி மாணவர்களுக்கு ஆண்டிற்கு 40 இலவச வன விலங்குகளை பற்றிய விழிப்புணர்வு முகாம்கள் ஏற்பாடு செய்யப்படுகின்றன. பள்ளி கல்லூரி மாணவர்கள் இலவச முகாம்கள் தவிர மற்ற நாட்களில் படிக்கும் கல்வி நிறுவனங்களிடம் இருந்து அனுமதி கடிதம் பெற்று வந்தால் ஒரு நாள் தங்குவதற்கு 30 ரூபாய் மட்டுமே கட்டணமாக வாங்கப்படுகிறது.

அதிக படுக்கை அறைகள் கொண்ட பொதுவான அறையில் தங்குவதற்கு நாள் ஒன்றுக்கு 100 ரூபாய் கட்டணமாக வாங்கப்படுகிறது. விருந்தினர் அறையில் தங்குவதற்கு நபர் ஒன்றுக்கு 400 ரூபாயும், இரண்டு நபர்கள் தங்குவதற்கு 600 ரூபாயும் கட்டணமாக வசூலிக்கப்படுகிறது. சிறப்பு தங்கும் இடம் சீத்தல் வேலி பகுதியில் 400 ரூபாயும், எலிபெண்ட் வேலி பகுதியில் தங்குவதற்கு 350 ரூபாயும், பைசன் வேலி பகுதியில் தங்குவதற்கு 150 ரூபாயும் வாங்கப்படுகிறது.

தனியாக சிறப்பு குடில்களில் தங்குவதற்கு இரண்டாயிரத்து 500 ரூபாய் முதல் நான்காயிரம் ரூபாய் வரை கட்டணமாக வாங்கப்படுகிறது. மேலும் தொடர்புக்கு 094422 01690 என்ற எண்ணில் தொடர்புகொள்ளலாம். இத்தகவலை பரம்பிக்குளம் வன உயிரின காப்பாளர் விஜயானந்தன் தெரிவித்தார்.



தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us