ADDED : ஜூலை 24, 2011 02:06 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பொள்ளாச்சி : பொள்ளாச்சியில் பா.ஜ., மாவட்ட செயல்வீரர்கள் கூட்டம் நடந்தது.
மாவட்ட தலைவர் ரமேஷ் அஷ்டலட்சுமி விளக்கேற்றினார். மாவட்ட பொது செயலாளர் ரகுநாதன் தலைமை வகித்தார். பொள்ளாச்சி நகர செயலாளர் சிவப்பிரகாஷ் முன்னிலை வகித்தார். கோர்ட் உத்தரவுப் படி, தமிழகத்தில் சமச்சீர் கல்வியை உடனடியாக நிறைவேற்ற வேண்டும்; விலைவாசி உயர்வுக்கு காங்., அரசு பொறுப்பேற்று பதவி விலக வேண்டும்; வரும் உள்ளாட்சி தேர்தலில், கோவை தெற்கு மாவட்டத்திலுள்ள அனைத்து உள்ளாட்சி அமைப்புகளிலும், பா.ஜ., நேரடியாக போட்டியிடும் என்பன உட்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. மாநில பொது செயலாளர் ரமேஷ், மாவட்ட பொது செயலாளர் குமரேஷ், மாவட்ட துணைத் தலைவர் திருவேங்கடகுமார், மாவட்ட செயலாளர்கள் கோவிந்தராஜ், பாபு பேசினார்.