/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
"சமூக சேவைக்காக ஒன்றுபடுங்கள்' : ஐ.ஏ.எஸ்., உமாசங்கர்
/
"சமூக சேவைக்காக ஒன்றுபடுங்கள்' : ஐ.ஏ.எஸ்., உமாசங்கர்
"சமூக சேவைக்காக ஒன்றுபடுங்கள்' : ஐ.ஏ.எஸ்., உமாசங்கர்
"சமூக சேவைக்காக ஒன்றுபடுங்கள்' : ஐ.ஏ.எஸ்., உமாசங்கர்
ADDED : ஜூலை 25, 2011 01:59 AM
கோவை : கோவை, சி.ஐ.டி., கல்லூரியில் 1982 முதல் 1986 வரை இன்ஜினியரிங் படித்த முன்னாள் மாணவர்கள் சந்திப்பு நிகழ்ச்சியின் ஒரு பகுதியாக 'சி.ஐ.டி., 86 டிரஸ்ட்' துவக்க விழா அவிநாசி ரோட்டிலுள்ள 'லீ மெரீடியன்' ஓட்டலில் நடந்தது.ஐ.ஏ.எஸ்., அதிகாரி உமாசங்கர், 'சி.ஐ.டி., 86 டிரஸ்ட்' துவக்கி வைத்து பேசுகையில் '' சமூக, பொருளாதாரத்தில் பின்தங்கிய மாணவ, மாணவியருக்கு கல்வி உதவித்தொகை மற்றும் தன்னார்வ தொண்டு அமைப்புகளுக்கு நிதி உதவி அளிக்கும் வகையில் முன்னாள் மாணவர் சங்கத்தினர் அறக்கட்டளை துவக்கியுள்ளது மகிழ்ச்சியளிக்கிறது.
இந்திய ராணுவத்தில் கடைநிலை ஊழியராக பணியாற்றியவர் அன்னா ஹசாரே. இன்று நாடே அவருக்கு பின்னால் ஒன்றுபட்டு நிற்கிறது.
சமுதாய சேவை பணிகளில் ஒன்றுபட்டு செயல்பட்டால், வெற்றியின் அளவு ஆயிரம் மடங்கு அதிகரிக்கும்,'' என்றார்.தே.மு.தி.க., எம்.எல்.ஏ., பாண்டியராஜன் பேசுகையில், ''25 ஆண்டுகளுக்கு முன் இன்ஜினியரிங் படித்து இன்று அனைவரும் வாழ்வில் உயர்ந்த இடத்தில் உள்ளீர்கள். இருப்பினும் அடுத்த தலைமுறையினருக்கு உதவும் வகையில் ஒரு அறக்கட்டளை துவக்கியுள்ளது பாராட்டுக்குரியது,'' என்றார். பட்டிமன்ற பேச்சாளர் ராஜா, சினிமா இயக்குனர் அழகம்பெருமாள் உள்ளிட்டோர் பேசினர். சிவகாசியை சேர்ந்த ஏழை மாணவர் மரியசெல்வன், மற்றும் ஈரோடு மாவட்டத்தை சேர்ந்த மாணவி வைதேகி உள்ளிட்டோருக்கு இன்ஜி., கல்வி கற்க அறக்கட்டளை சார்பில் நிதி உதவி வழங்கப்பட்டது. இதில், சிவகாசியைச் சேர்ந்த மாணவர் மரியசெல்வன் குறித்து 'தினமலர்' நாளிதழில் செய்தி வெளியாகியிருந்தது.
இதையடுத்து அரியலூர், திருச்சி அண்ணா பல்கலையில் பி.இ., படிக்க அவருக்கு நிதி உதவி வழங்கப்பட்டது. மாணவி வைதேகிக்கு ஸ்ரீகுரு இன்ஜி., கல்லூரியில் இடம் அளிக்கப்பட்டு கல்வி உதவி தொகை வழங்கப்பட்டது. ஸ்ரீகுரு கல்லூரி முதல்வர் அன்புசெழியன் பங்கேற்றார். 'உதவும் கரங்கள்' தன்னார்வ தொண்டு அமைப்புக்கு நிதி உதவி வழங்கப்பட்டது. அமைப்பின் நிர்வாகி வித்யாகர் தொகையை பெற்றுக்கொண்டார். தொடர்ந்து விஜய் 'டிவி'யில் பங்கேற்கும் நடன கலைஞர்கள் மற்றும் பாடகர்களின் கலை நிகழ்ச்சி நடந்தது.நிர்வாகிகள் தேர்வு: நேற்று காலை சி.ஐ.டி., கல்லூரி கலையரங்கில் நடந்த 'சி.ஐ.டி., 86 டிரஸ்ட்'ன் ஆண்டு பொதுக்குழு கூட்டத்தில் அறக்கட்டளை தலைவர் ஸ்ரீபிரசாத், துணை தலைவர் ரமேஷ், செயலாளர் ரவி, பொருளாளர் சத்யநாராயணன், நிர்வாகக்குழு உறுப்பினர்களாக ஆன்டோ ஜார்ஜ், உமாபதி, செல்வம், சுப்பையா, ரவிச்சந்திரன், ஜெயகோபு, மகேந்திரன், கோபிநாத், பொன்ராஜபாண்டி, பரமசிவம் உள்ளிட்டோர் தேர்ந்தெடுக்கப்பட்டனர். அறக்கட்டளை குறித்த விபரங்களுக்கு, சி.ஐ.டி.,86 டிரஸ்ட்' 26, எம்-பிளாக், 10வது வீதி, அண்ணா நகர், சென்னை- 40 என்ற முகவரியிலும் 98405 00266, 09538 733199 என்ற மொபைல்போன் எண்களிலும் தொடர்பு கொள்ளலாம் என, அறக்கட்டளை நிர்வாகிகள் தெரிவித்தனர்.