ADDED : ஜூலை 25, 2011 02:00 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஆனைமலை : ஆனைமலை அடுத்த கோட்டூர் ம.செ., அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளியில் மருத்துவ முகாம் நடந்தது.
மருத்துவ அலுவலர் ராமசாமி, ஆழியார் ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவர் உமாபிரியதர்ஷினி ஆகியோர் மாணவியரை பரிசோதித்தனர். மருந்துகள் வழங்கப்பட்டன.சுகாதார ஆய்வாளர்கள், கிராம சுகாதார செவிலியர்கள் சுகாதாரம், உடல்நலம் பற்றி எடுத்துரைத்தனர். தலைமை ஆசிரியர் லோகநாயகி, உதவி தலைமை ஆசிரியர், ஆசிரியர்கள் முகாமிற்கான ஏற்பாடுகளை செய்திருந்தனர்.