ADDED : ஜூலை 25, 2011 02:01 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
நெகமம் : நெகமம் அடுத்துள்ள சேரிபாளையம் அரசுமேல்நிலைப்பள்ளி, முள்ளுப்பாடி, சிங்கராம்பாளையம் போன்ற துவக்கப்பள்ளிகளில் நல்லட்டிபாளையம் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் மூலம் பள்ளி சிறார் நலத்திட்ட சிறப்பு முகாம் நடத்தப்பட்டது.இதில், பள்ளிக்குழந்தைகளுக்கு மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டது.
பரிந்துரை செய்யப்பட்ட குழந்தைகளை கோவை அரசு மருத்துவ கல்லூரி அழைத்து சென்று சிறுநோய்க்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. வளரினம் பெண்களுக்கு ஏற்படும், ரத்த சோகை தடுப்பு, சரிவிகித உணவு பற்றி வட்டார விரிவாக்கக்கல்வியாளர் ஜோதிமணி கூறினார்.இம்முகாமில், வட்டார மருத்துவ அலுவலர் டாக்டர் விஜய், சுகாதார ஆய்வாளர் குணசேகரன், செவிலியர்கள் ரேவதி, ராணி ஆகியோர் பங்கேற்றனர். சேரிபாளையம் பள்ளி தலைமை ஆசிரியர் செல்வகணபதி நன்றி கூறினார்.