sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, பிப்ரவரி 20, 2026 ,மாசி 8, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கோயம்புத்தூர்

/

துரத்தும் குதிரைகள்; ரோட்டில் "திக்...திக்'

/

துரத்தும் குதிரைகள்; ரோட்டில் "திக்...திக்'

துரத்தும் குதிரைகள்; ரோட்டில் "திக்...திக்'

துரத்தும் குதிரைகள்; ரோட்டில் "திக்...திக்'


ADDED : ஆக 09, 2011 02:49 AM

Google News

ADDED : ஆக 09, 2011 02:49 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

துடியலூர் : கோவை தடாகம் ரோடு கணுவாயில் சுற்றித்திரியும் முரட்டு குதிரைகள், நடந்து செல்பவர்கள் மற்றும் வாகனங்களில் செல்பவர்களை துரத்துவதால் விபத்து ஏற்படுகிறது.

குதிரைகளை சுதந்திரமாக நடமாடுவதை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும், என வலியுறுத்தப்பட்டுள்ளது. மேட்டுப்பாளையம் ரோட்டில் திரிந்த முரட்டு குதிரைகள் தற்போது, தங்களது இருப்பிடத்தை தடாகம் ரோட்டுக்கு மாற்றியுள்ளன. கணுவாயில் இருந்து தடாகம் செல்லும் வழியில், தேங்கி கிடக்கும் குப்பைகளையும், அதில் இருக்கும் உணவுப் பொருட்களையும் உண்ண குதிரைகள் சுற்றி வருகின்றன. கவுண்டம்பாளையம், ஜி.என்.மில்ஸ் பிரிவு, வெள்ளக்கிணர் பிரிவு பகுதிகளில் இருந்த குதிரைகள், தற்போது கணுவாயில் முகாமிட்டுள்ளன. கோவை வடக்கு பகுதியில் கவுண்டம்பாளையம் நகராட்சி, வெள்ளக்கிணர், துடியலூர் பேரூராட்சிகளுக்குட்பட்ட பகுதி மற்றும் தடாகம் ரோட்டில்தான் குதிரைகளின் நடமாட்டம் அதிகம்.கவுண்டம்பாளையத்தில் குதிரை வண்டிகளை வைத்திருந்த சிலர், குதிரைகளை பராமரித்து வந்தனர். பராமரிப்பு செலவு அதிகரித்து விட்டதால், குதிரைகளை வீட்டில் இருந்து துரத்தி விட்டனர். அவை தற்போது, மேட்டுப்பாளையம் ரோடு, தடாகம் ரோட்டோரங்களில் உள்ள குப்பைமேட்டு உணவுகளை உண்டு வாழ்கின்றன. குதிரைகளை துரத்தினால் கடிக்க பாய்ந்து வருகிறது. இதனால், குதிரைகள் அருகே யாரும் செல்வதில்லை. மேட்டுப்பாளையம் ரோடு, தடாகம் ரோட்டில் சுற்றித்திரிந்த 15 குதிரைகள், தற்போது குட்டி போட்டு 30 குதிரைகளாக பெருகி விட்டன.



கவுண்டம்பாளையத்தில் சுற்றித்திரியும் குதிரைகளை, அவற்றின் உரிமையாளர்கள் உடனடியாக பிடித்து தங்கள் கட்டுக்குள் வைத்து, பராமரித்துக் கொள்ள வேண்டும். இல்லாவிட்டால், குதிரையின் உரிமையாளர்களுக்கு அபராதம் விதிக்கப்படும் என கவுண்டம்பாளையம் நகராட்சி பலமுறை எச்சரித்தது. ஆனால், பலன் இல்லை. இது குறித்து நகராட்சி நிர்வாகத்தினர் கூறுகையில்,''குதிரைகளை தங்கள் பாதுகாப்பில் வைத்துக் கொள்ள வேண்டும் என அவற்றின் உரிமையாளர்களுக்கு பலமுறை தெரிவிக்கப்பட்டு விட்டது. இதையும் மீறி, குதிரைகளை ரோட்டில் சுதந்திரமாக நடமாடவிட்டால் அவற்றின் உரிமையாளர்களுக்கு அபராதம் விதிப்பதோடு, குதிரைகளும் பறிமுதல் செய்யப்படும்'' என்றனர். இதே போல, பன்னிமடை, சோமையம்பாளையம் ஊராட்சி நிர்வாகங்களும் எச்சரிக்கை விடுத்துள்ளன. பொதுமக்களை துரத்தும் குதிரைகளை கட்டுப்படுத்த முயற்சிபவர்களை, குதிரைகள் துரத்துகின்றன. இதனால், துரத்துபவர்கள் கீழே விழுந்து காயமடைவதும், குதிரைக் கடி வாங்குவதும் சாதாரண நிகழ்வுகளாகி விட்டன.








      Dinamalar
      Follow us