ADDED : மார் 06, 2024 07:04 AM
சென்னை : பதிவுத்துறையில், 3 தணிக்கை மாவட்ட பதிவாளர்கள் திடீரென மாற்றப்பட்டுள்ளனர்.
தமிழகத்தில், 55 பதிவு மாவட்டங்கள் உள்ளன. இதில் நிர்வாக பணி, தணிக்கை பணிக்கு என தனித்தனியாக மாவட்ட பதிவாளர்கள் உள்ளனர். ஒவ்வொரு சார் பதிவாளர் அலுவலகத்திலும் பதிவாகும் பத்திரங்களில் வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளதா என்பதை ஆய்வு செய்வது இவர்களின் பணி.
இந்நிலையில், சிதம்பரம், சேரன்மகாதேவி, ராணிப்பேட்டை பதிவு மாவட்டங்களில், தணிக்கை பணிகள் தொடர்பாக பல்வேறு புகார்கள் வந்ததாக கூறப்படுகிறது. இதன் அடிப்படையில் விசாரணை நடத்தப்பட்டு, மாவட்ட பதிவாளர்கள் மாற்றப்பட்டுள்ளனர்.
l சேரமகாதேதி தணிக்கை மாவட்ட பதிவாளர், எஸ். வணிதா, ராணிப்பேட்டை தணிக்கை மாவட்ட பதிவாளராக மாற்றப்பட்டுள்ளார்
l சிதம்பரம் தணிக்கை மாவட்ட பதிவாளராக இருந்த, க. ராஜா, கோவையில் புலனாய்வு பிரிவு மாவட்ட பதிவாளராக மாற்றப்பட்டுள்ளார்
l ராணிப்பேட்டை தணிக்கை மாவட்ட பதிவாளர் பி. சக்திவேல், திருவண்ணாமலை தணிக்கை மாவட்ட பதிவாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.
இதற்கான உத்தரவை பதிவுத்துறை செயலர் ஜோதி நிர்மலா சாமி பிறப்பித்துள்ளார்.

