/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
கோவை டாக்டருக்கு இங்கிலாந்து கவுரவம்
/
கோவை டாக்டருக்கு இங்கிலாந்து கவுரவம்
ADDED : ஆக 31, 2025 11:39 PM

கோவை; இங்கிலாந்தில் உள்ள, மருத்துவர்கள் மற்றும் அறுவைசிகிச்சை நிபுணர்களுக்கான ராயல் கல்லுாரியில், இந்திய ஆலோசகராக கோவை அரசு மருத்துவமனை ஆர்த்தோ பிரிவு இயக்குனர் டாக்டர் வெற்றிவேல் செழியன் நியமிக்கப்பட்டுள்ளார்.
மருத்துவத்துறை மற்றும் கல்வித்துறையில், இவரின் பங்களிப்புக்கு அங்கீகாரமாக இப்பதவி வழங்கப்பட்டுள்ளது. இந்தியாவில் பிற மருத்துவர்கள் இக்கல்விநிறுவனத்தின் ஆராய்ச்சி உதவித்தொகை பெற வழிகாட்டுதல், இந்திய மருத்துவ பட்டதாரிகளுக்கு இங்கிலாந்தில் படிக்க பயிற்சி அளிப்பது, அங்கு படிக்கும் இந்தியர்களுக்கு உதவுவது உள்ளிட்ட பல்வேறு பொறுப்புகள், இதன் வாயிலாக வழங்கப்படுகிறது.
தவிர, பாடத்திட்டம் உருவாக்குவது, சர்வதேச ஆலோசகர் கூட்டங்களில் பங்கேற்பது, ஆராய்ச்சிகள் உள்ளிட்ட செயல்பாடுகளில் பங்கேற்பது ஆகிய பொறுப்புகளும் வழங்கப்பட்டுள்ளன. மூன்று ஆண்டு காலம் இப்பொறுப்பில் இவர் செயல்படவுள்ளார்.
கோவை அரசு மருத்துவமனை டீன், சக டாக்டர்கள் அனைவரும் ஆர்த்தோ பிரிவு நிபுணர் வெற்றிவேல் செழியனுக்கு, வாழ்த்துக்களை தெரிவித்தனர்.