/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
கோவை அரசுக்கல்லுாரி ஆசிரியர்கள் ஆர்ப்பாட்டம்
/
கோவை அரசுக்கல்லுாரி ஆசிரியர்கள் ஆர்ப்பாட்டம்
ADDED : ஆக 21, 2025 08:39 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கோவை; மாநிலம் முழுவதும், 18 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி, தமிழ்நாடு அரசுக் கல்லுாரி ஆசிரியர் கழகம் சார்பில், நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது.
கோவை தெற்கு தாசில்தார் அலுவலகம் எதிரேநேற்று மாலை நடந்த ஆர்ப்பாட்டத்தில்,சங்க தலைவர் ராபர்ட் தலைமை வகித்தார்.
அப்போது, 'பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும், பேராசிரியர்களின் பணியிட மாறுதலுக்கு பொது கலந்தாய்வு நடத்த வேண்டும், அரசு கலைக் கல்லுாரிகளில் உள்ள காலிப்பணியிடங்களை நிரப்ப வேண்டும், பேராசிரியர்களின் ஓய்வு வயதை, 65 ஆக உயர்த்த வேண்டும்' என்பன உள்ளிட்ட கோஷங்கள் எழுப்பப்பட்டன. கோவை மண்டல செயலர் ராஜகோபால் உட்பட பலர் பங்கேற்றனர்.