/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
இரண்டு ஆண்டில் இந்த ஆண்டு இத'மே' கோடையைத் தவிர்த்த கோவை
/
இரண்டு ஆண்டில் இந்த ஆண்டு இத'மே' கோடையைத் தவிர்த்த கோவை
இரண்டு ஆண்டில் இந்த ஆண்டு இத'மே' கோடையைத் தவிர்த்த கோவை
இரண்டு ஆண்டில் இந்த ஆண்டு இத'மே' கோடையைத் தவிர்த்த கோவை
ADDED : ஜூன் 01, 2025 11:16 PM
கோவை : கோவையில், கடந்த இரண்டு ஆண்டுகளோடு ஒப்பிடுகையில், இந்த ஆண்டு மே மாதத்தில் வெப்பம் அதிகம் இன்றி, இதமான பருவநிலையே நிலவியுள்ளது.
கோவை மாவட்டத்தில், கடந்த மே மாதம் கோடை வெப்பத்தின் தாக்கம் ஏறக்குறைய இல்லை எனலாம். மே துவங்கியதுமே அவ்வப்போது கோடை மழை பெய்தது. மேலும், தென்மேற்கு பருவமழையும் முன்கூட்டியே துவங்கி, மே இறுதி வாரத்தை மழைக்காலமாக்கியது.
கடந்த மே மாதத்தில் அதிகபட்ச வெப்பநிலையாக, மே 13ம் தேதி, 36 டிகிரி செல்சியஸ் வெப்பம் பதிவாகி இருந்தது. இது முந்தைய இரு ஆண்டுகளை விட, குறைவான வெப்பமாகும். சராசரி வெப்பநிலையும், 28 டிகிரி செல்சியஸாக இருந்தது.
கோவையில், கடந்த 2024ல் மே மாதத்தில் அதிகபட்சமாக 39.8 டிகிரி செல்சியஸும், 2023ல், 37.2 டிகிரி செல்சியஸ் வெப்பமும் பதிவாகி இருந்தது. 2022லும், 36.2 டிகிரி செல்சியஸ் வெப்பம் பதிவாகி இருந்தது.
கடந்த மூன்று ஆண்டுகளில், கடந்த மே மாதத்தில் இதமான பருவநிலை நிலவியது. கோவை மக்கள் கோடையின் தாக்கத்தில் இருந்து தப்பி, குளுகுளு பருவநிலையை அனுபவித்தனர்.