/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
கோவையில் வீடு வீடாக கொள்ளை ஜட்டி கொள்ளையர்கள் அட்டகாசம்
/
கோவையில் வீடு வீடாக கொள்ளை ஜட்டி கொள்ளையர்கள் அட்டகாசம்
கோவையில் வீடு வீடாக கொள்ளை ஜட்டி கொள்ளையர்கள் அட்டகாசம்
கோவையில் வீடு வீடாக கொள்ளை ஜட்டி கொள்ளையர்கள் அட்டகாசம்
ADDED : நவ 04, 2024 03:44 AM

கோவை: கோவை மாநகரில் வசிக்கும் சிலர், தீபாவளியை முன்னிட்டு தொடர் விடுமுறை என்பதால், குடும்பத்துடன் சொந்த ஊருக்கும், சுற்றுலா தலங்களுக்கும் சென்றுள்ளனர்.
அந்த வீடுகளை குறிவைத்து, கொள்ளையர்கள் திருட்டில் ஈடுபட்ட சம்பவம் கோவையில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
கோவை, பீளமேடு, லட்சுமி நகரைச் சேர்ந்தவர் ஆனந்தராம், 36; கட்டுமான தொழில் செய்து வருகிறார். இவர், தீபாவளியை முன்னிட்டு, குடும்பத்துடன் பெங்களூரு சென்றுள்ளார். னந்தராம் வீட்டில் பொருத்தப்பட்டு இருந்த 'சிசிடிவி' கேமராவை தன் மொபைல் போனில் பார்த்தார்.
அதில், ஐந்து மர்ம நபர்கள், வீட்டின் கேட்டில் ஏறி குதித்து பொருட்களை திருடிச் செல்லும் காட்சிகள் இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார். உடனே அவர், போலீசாருக்கு தகவல் தெரிவித்தார்.
பீளமேடு போலீசார் விரைந்து சென்று விசாரித்தனர்.
முதற்கட்ட விசாரணையில் ஆனந்தராமின் வீட்டில் பீரோவில் இருந்த, 35 சவரன் தங்க நகைகள் மற்றும் 5 கிலோ வெள்ளி பொருட்கள் திருடப்பட்டிருந்தது தெரிந்தது.
அவர், பெங்களூரில் இருந்து கோவை வந்த பின்னரே முழு நிலவரம் தெரியவரும்.
மர்ம நபர்கள் ஐந்து பேரும் ஜட்டி மட்டும் அணிந்து, முகத்தை துணியால் மறைத்து வந்திருப்பது 'சிசிடிவி' கேமராவில் பதிவாகி உள்ளது. அவர்கள் லட்சுமி நகர் பகுதி சாலையில் ஓரமாக நடந்து செல்லும் காட்சிகளும் பதிவாகி இருந்தன.
மேலும், கோவையில் சில நாட்களில் ஐந்து வீடுகளில் கொள்ளை சம்பவம் நடந்துள்ளது.
தொடர்ந்து நடைபெற்ற இந்த சம்பவங்களில் ஈடுபட்டது ஒரே கும்பலைச் சேர்ந்தவர்களா அல்லது வெவ்வேறு நபர்களா என்பது குறித்தும் போலீசார் விசாரிக்கின்றனர்.