/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
தமிழகத்தின் இரண்டாவது பரபரப்பான விமான நிலையமானது கோவை
/
தமிழகத்தின் இரண்டாவது பரபரப்பான விமான நிலையமானது கோவை
தமிழகத்தின் இரண்டாவது பரபரப்பான விமான நிலையமானது கோவை
தமிழகத்தின் இரண்டாவது பரபரப்பான விமான நிலையமானது கோவை
ADDED : ஜன 16, 2025 11:50 PM

கோவை : கோவை சர்வதேச விமான நிலையத்தில் இருந்து இயக்கப்படும் விமானங்களின் எண்ணிக்கை அதிகரிப்பால், கோவை விமான நிலையத்தில் பயணிகளின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது.
இந்நிலையில், இதுவரை இல்லாத அளவு ஒரே நாளில், 11 ஆயிரத்து, 364 பயணிகள் கோவை விமான நிலையத்தை பயன்படுத்தி உள்ளனர். இதன் வாயிலாக சென்னைக்கு அடுத்தபடியாக தமிழகத்தின் இரண்டாவது பரபரப்பான விமான நிலையமாக கோவை விமான நிலையம் மாறியுள்ளது.
கோவையிலிருந்து சென்னைக்கு, 10, மும்பைக்கு, 6, ஐதராபாத், பெங்களூருக்கு தலா, 5, டில்லிக்கு, 4, புனே, கோவாவுக்கு தலா, 1 என, பல்வேறு விமான நிறுவனங்களால், மொத்தம், 32 உள்ளூர் விமானங்கள் இயக்கப்படுகின்றன. இவற்றில் வருகை மற்றும் புறப்பாடு இரண்டுக்கும் சேர்த்து, மொத்தம், 11 ஆயிரத்து, 364 சீட்கள் உள்ளன.
இதுதவிர, சர்வதேச விமானங்களும் இயக்கப்பட்டுள்ளன. பயணிகளின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருவதால், ஒரு சிறிய சர்வதேச முனையத்தை கிழக்கு பகுதியில் தற்போதுள்ள முனைய கட்டடத்துக்கு அருகில் கஸ்டம்ஸ் மற்றும் இமிகிரேஷன் வசதிகளுடன் ஏற்படுத்த வேண்டும் என்ற கோரிக்கை வலுத்துள்ளது.