sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, மார்ச் 29, 2026 ,பங்குனி 15, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கோயம்புத்தூர்

/

 தங்கம் விற்பனை 50 சதவீதம் சரிவு கோவை நகை தயாரிப்பாளர்கள் கவலை

/

 தங்கம் விற்பனை 50 சதவீதம் சரிவு கோவை நகை தயாரிப்பாளர்கள் கவலை

 தங்கம் விற்பனை 50 சதவீதம் சரிவு கோவை நகை தயாரிப்பாளர்கள் கவலை

 தங்கம் விற்பனை 50 சதவீதம் சரிவு கோவை நகை தயாரிப்பாளர்கள் கவலை


ADDED : மார் 15, 2026 06:32 AM

Google News

ADDED : மார் 15, 2026 06:32 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கோவை: கோவையில் தங்கம் விற்பனை 50 சதவீதம் சரிந்துள்ளதாக வேதனைப்படும் நகை தயாரிப்பாளர்கள் இயல்பு நிலைக்காக காத்திருக்கின்றனர்.

கோவை மாவட்டத்தில் 650 தங்க நகை ஜூவல்லரி கடைகளும், 1,500 தயாரிப்பாளர்களும் உள்ளனர். அமெரிக்கா--ஈரான், உக்ரைன்-ரஷ்யா போர் போன்ற சர்வதேச நிலவரங்களால் தங்கம் விலையில் ஏற்றம், இறக்கம் காணப்படுகிறது.

நேற்று 22 காரட் ஆபரண தங்கத்தின் விலை சவரன் ஒரு லட்சத்து 18 ஆயிரத்து 80 ரூபாயாக இருந்தது. நேற்று முன்தினம் ஒரு லட்சத்து 19 ஆயிரத்து 200 ஆகவும், 12ம் தேதி ஒரு லட்சத்து 19 ஆயிரத்து 760 ஆகவும் விற்கப்பட்டது. ஒரு கிராம் ரூ.14 ஆயிரத்துக்கும் அதிகமாக உள்ளது. ஏழை, எளிய, நடுத்தர மக்கள் விலை உயர்வால் வாங்குவதற்கு தயங்குகின்றனர். இதனால் தங்கம் விற்பனை சரிய துவங்கியுள்ளது.

கோயம்புத்துார் தங்க நகை தயாரிப்பாளர்கள் சங்க தலைவர் முத்துவெங்கட்ராமிடம் கேட்டபோது,''சர்வதேச அளவில் நிலவும் போர் சூழலால் தங்கத்தின் விலை ஏறிக்கொண்டே செல்கிறது. கோவையில் தினமும் 200 கிலோ தங்கம் விற்பனையாகிவந்த நிலையில் கடந்த இரு மாதங்களாக தினமும் 100 கிலோவுக்கும் குறைவாக விற்பனையாகிறது. அதாவது, 50 சதவீதம் விற்பனை சரிந்துள்ளது. இவ்விலை உயர்வால் இத்தொழிலை நம்பியிருக்கும் ஆயிரத்துக்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் நெருக்கடிக்கு தள்ளப்பட்டுள்ளனர். போர் போன்றவை முடிவுக்கு வந்தால் தங்கம் விலை பழைய நிலைக்கு வந்துவிடும் என்பதில் சந்தேகமில்லை. அந்த காலகட்டத்தை எதிர்பார்த்துள்ளோம்,'' என்றார்.






      Dinamalar
      Follow us