sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, மார்ச் 28, 2026 ,பங்குனி 14, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கோயம்புத்தூர்

/

 பஸ்சில் ரூ. 62 லட்சம் பறிமுதல் கோவை வாலிபர் கைது

/

 பஸ்சில் ரூ. 62 லட்சம் பறிமுதல் கோவை வாலிபர் கைது

 பஸ்சில் ரூ. 62 லட்சம் பறிமுதல் கோவை வாலிபர் கைது

 பஸ்சில் ரூ. 62 லட்சம் பறிமுதல் கோவை வாலிபர் கைது

1


ADDED : மார் 15, 2026 06:31 AM

Google News

ADDED : மார் 15, 2026 06:31 AM

1


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பந்தலுார்: கேரளா அரசு பஸ்சில் கொண்டு வந்த, 62 லட்சம் ரூபாயை சோதனை சாவடியில் பறிமுதல் செய்த போலீசார் கோவை வாலிபரை கைது செய்தனர்.

கேரளா மாநிலம் மலப்புரம் வழிக்கடவு சோதனை சாவடியில் கேரள மாநில மதுவிலக்கு பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டர் சத்திய பாலன் தலைமையிலான போலீசார், நேற்று காலை வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது, கேரளா மாநிலம் பெருந்தல்மன்னா பகுதியில் இருந்து நீலகிரி மாவட்டம் கூடலுாருக்கு சென்ற, கேரளா மாநில அரசு பஸ்சை சோதனையிட்டனர். அப்போது, ஒரு பையை பிரித்துப் பார்த்தபோது, அதில், 62 லட்சம் ரூபாய் பணம் இருந்தது தெரியவந்தது.

பணத்தை எடுத்து வந்த கோவை செல்வபுரம் பகுதியைச் சேர்ந்த நாகராஜ், 40, என்பவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

போலீசார் கூறுகையில், 'தேர்தல் அறிவிக்கப்பட உள்ள நிலையில், பணம், பரிசுப் பொருட்கள் கடத்தலை தடுக்கும் வகையில், வாகன சோதனை மேற்கொண்டு வருகிறோம். கணக்கில் வராத பணம், பரிசு பொருட்கள் எடுத்துச் சென்றால் நடவடிக்கை எடுக்கப்படும்,' என்றனர்.






      Dinamalar
      Follow us