/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
கோவை மருத்துவக்கல்லுாரி முன்னாள் மாணவர்கள் சந்திப்பு
/
கோவை மருத்துவக்கல்லுாரி முன்னாள் மாணவர்கள் சந்திப்பு
கோவை மருத்துவக்கல்லுாரி முன்னாள் மாணவர்கள் சந்திப்பு
கோவை மருத்துவக்கல்லுாரி முன்னாள் மாணவர்கள் சந்திப்பு
ADDED : ஜூலை 18, 2025 09:40 PM

கோவை; கோவை அரசு மருத்துவ கல்லுாரியில், 2000ம் ஆண்டு எம்.பி.பி.எஸ்., படித்த முன்னாள் மாணவர்கள் சந்திப்பு கூட்டம், ஆனைகட்டியில் உள்ள தனியார் ரிசார்ட்டில் நடந்தது.
இந்த சந்திப்பில், 66 பேர் பங்கேற்றனர். 25 ஆண்களுக்கு பிறகு ஒன்று கூடி முன்னாள் மாணவர்கள் தங்களின் மலரும் நினைவுகளை, ஒருவருக்கு ஒருவர் பகிர்ந்து கொண்டனர். படித்த அரசு மருத்துவ கல்லுாரிக்கு வந்து, வகுப்பறையில் அமர்ந்து உரையாடி மகிழ்ந்தனர்.
இது குறித்து, சந்திப்பு ஒருங்கிணைப்பாளர் டாக்டர் சந்தோஷ் கூறியதாவது:
2000ம் ஆண்டு பேட்சில் 98 பேர் படித்தோம். இந்த சந்திப்புக்கு, 66 பேர் வந்துள்ளனர். பலர் வெளிநாடுகளிலும், பிற மாநிலங்களிலும் இருப்பதால் வரமுடியவில்லை. ஐந்து ஆண்டுகளுக்கு ஒருமுறை சந்தித்து வருகிறோம்.
இடையில் கொரோனா தொற்று வந்ததால், சந்திப்பு நடக்கவில்லை. இன்றைக்கு ஒவ்வொருவரும் ஏம்.எஸ்., எம்.டி., என, பல்வேறு நிலைகளில் உயர்ந்த இடத்தில் உள்ளனர். இப்படி சந்திக்கும் போது, கல்லுாரி மாணவர்கள் போல், அன்றைய நினைவுகள் வந்து போகின்றன. இந்த சந்திப்பு எல்லோருக்கும் மகிழ்ச்சியாகவும், உற்சாகமாகவும் இருந்தது.
இவ்வாறு, அவர் கூறினார்.