/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
கோவை மெட்ரோ ரயில்- மத்திய அரசுக்கு கடிதம்
/
கோவை மெட்ரோ ரயில்- மத்திய அரசுக்கு கடிதம்
ADDED : நவ 21, 2025 06:44 AM
கோவை: சின்னவேடம்பட்டி தொழிற்துறை சங்கம் (சியா) தலைவர் தேவகுமார், மத்திய வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற விவகாரங்கள் துறை அமைச்சருக்கு அனுப்பியுள்ள கடிதம்:
கோவை நகருக்கு மெட்ரோ ரயில் திட்டம் இல்லை என்ற தகவல் கோவை தொழில்துறையினரிடையே பெரும் அதிருப்தியையும், கவலையையும் ஏற்படுத்தியுள்ளது. இந்தியாவின் வலுவான எம்.எஸ்.எம்.இ., தொழில் மையங்களில் முதலிடத்தில் இருப்பது கோவை.
தொடர்ந்து அதிகரித்து வரும் போக்குவரத்து நெரிசல், வரும் ஆண்டுகளில் மிகவும் கடுமையாக மாறும் என கணிக்கிறோம். மெட்ரோ ரயில் திட்டம் செயல்படுத்தப்பட்டால், தொழில் வளர்ச்சி பல மடங்கு உயரும். வெளிநாட்டு முதலீடுகள் ஈர்க்கப்படும். போக்குவரத்து நெருக்கடி குறையும். நகரின் பொருளாதார வளர்ச்சி உயரும்.
இத்திட்டத்துக்காக செலவிடப்படும் முதலீட்டை, கோவை தொழில் வளர்ச்சியால் மீண்டும் ஈட்டித் தரும் என்பதால், கோவைக்கு மெட்ரோ ரயில் மிக முக்கியம்.
எனவே, இப்பிரச்னையை பிரதமரின் கவனத்துக்கு கொண்டு சென்று, கோவை மெட்ரோ ரயில் திட்டத்துக்கு அனுமதி வழங்க வேண்டும்.
இவ்வாறு, கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

