/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
கோவை எம்.எல்.ஏ.,க்கள் விருப்ப மனு தாக்கல்
/
கோவை எம்.எல்.ஏ.,க்கள் விருப்ப மனு தாக்கல்
ADDED : டிச 20, 2025 05:09 AM
கோவை: எம்.எல்.ஏ., அம்மன் அர்ச்சுணன், கோவை தெற்கு தொகுதியில் போட்டியிட விருப்ப மனு தாக்கல் செய்துள்ளார்.
வரும் 2026 சட்டசபைத் தேர்தலை முன்னிட்டு, அ.தி.மு.க.,வில் விருப்ப மனு வினியோகம் கடந்த 15ம் தேதி துவங்கியது. சென்னை அ.தி.மு.க., தலைமை அலுவலகத்தில், தினமும் ஆயிரக்கணக்கானோர் விருப்ப மனு தாக்கல் செய்து வருகின்றனர். முன்னாள் அமைச்சர் வேலுமணி, தொண்டாமுத்தூர் தொகுதியில் மீண்டும் போட்டியிடுவதற்காக விருப்ப மனு தாக்கல் செய்துள்ளார்.
கோவை வடக்குத் தொகுதி எம்.எல்.ஏ., அம்மன் அர்ச்சுணன், தெற்கு தொகுதியில் போட்டியிட வாய்ப்புக் கோரி, விருப்ப மனு தாக்கல் செய்துள்ளார். 2021ல் பா.ஜ.,வுடன் கூட்டணி இருந்ததால், கோவை தெற்குத் தொகுதி, பா.ஜ.,வின் வானதி சீனிவாசனுக்கு வழங்கப்பட்டது. இம்முறை, மீண்டும் தெற்குத் தொகுதியை அம்மன் அர்ச்சுணன் கோரியுள்ளது, அரசியல் வட்டாரத்தில் பலரின் புருவத்தையும் உயரச் செய்துள்ளது.

