/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
இடம் பெயர்ந்த 4 லட்சம் வாக்காளர்கள் பெயர் நீக்கம்
/
இடம் பெயர்ந்த 4 லட்சம் வாக்காளர்கள் பெயர் நீக்கம்
இடம் பெயர்ந்த 4 லட்சம் வாக்காளர்கள் பெயர் நீக்கம்
இடம் பெயர்ந்த 4 லட்சம் வாக்காளர்கள் பெயர் நீக்கம்
ADDED : டிச 20, 2025 05:08 AM
கோவை: கோவை மாவட்டத்தில் இடம் பெயர்ந்து சென்றதற்காக, நீக்கம் செய்யப்பட்ட வாக்காளர்கள் எண்ணிக்கை 3,99,159 ஆகவும், முகவரியில் வசிக்காதவர்கள், 1,08,360 வாக்காளர்கள் நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.
கோவை மாவட்டத்தில்,வாக்காளர் பட்டியல் கணக்கெடுப்பு பணிகளுக்குப்பின், நேற்று வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டது.
அதில், வீடுகளிலிருந்து இடம் பெயர்ந்து சென்றதற்காக, நீக்கம் செய்யப்பட்ட வாக்காளர்களின் எண்ணிக்கை, 3,99,159 ஆக இருந்தது. வீடு மாறி சென்றவர்கள், ஓட்டுச் சவாடி நிலைய அலுவலர் வசம் படிவங்களை பெற்று, பூர்த்தி செய்து சமர்ப்பிக்காத, 1,08,360 வாக்காளர்கள் நீக்கப்பட்டனர். இந்த வாக்காளர்கள், ஓட்டுச்சாவடி நிலைய அலுவலரை தொடர்பு கொண்டு பேசவில்லை. அவர் அழைத்த போது, மொபைலை எடுத்து பேசவில்லை.
எவ்வித தகவலும் இல்லாத காரணத்தால், ஓட்டுச்சாவடி நிலைய அலுவலர் கொடுத்த தகவலின் அடிப்படையில், அரசு அதிகாரிகள் கொடுத்த ஒப்புதல் மற்றும் அரசியல் கட்சியினரின் நேரடி ஒப்புதலோடு, 5,07,519 வாக்காளர்களின் பெயர் நீக்கப்பட்டது.

