/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
'கோவை பா.ஜ.,வின் கோட்டை என்பதை நிரூபிக்க வேண்டும்'
/
'கோவை பா.ஜ.,வின் கோட்டை என்பதை நிரூபிக்க வேண்டும்'
'கோவை பா.ஜ.,வின் கோட்டை என்பதை நிரூபிக்க வேண்டும்'
'கோவை பா.ஜ.,வின் கோட்டை என்பதை நிரூபிக்க வேண்டும்'
ADDED : மார் 11, 2024 02:09 AM

கோவை;''கோவை பா.ஜ.,வின் கோட்டை என்பதை நிரூபிக்க, நாம் அனைவரும் தாமரைக்கு வாக்களிக்க வேண்டும்,'' என, இ.ம.க., பொதுக்கூட்டத்தில் அர்ஜூன் சம்பத் பேசினார்.
கோவையில், இந்து மக்கள் கட்சி சார்பில், தேர்தல் பிரசார பொதுக்கூட்டம், காந்திபுரம் வி.கே.கே.மேனன் சாலையில் நடந்தது. இதில், கட்சியின் நிறுவன தலைவர் அர்ஜூன் சம்பத் பேசியதாவது:
பிரதமர் மோடியின் ஏராளமான திட்டங்கள், மக்களை நேரடியாக சென்றடைந்துள்ளன. அனைவருக்கும் கல்வி, வேலை, தொழில் மற்றும் விவசாய வளர்ச்சி, மருத்துவம் மற்றும் சுகாதாரம் என்று, நம் நாடு வேகமாக முன்னேறி வருகிறது.
தமிழகத்தில் 'டிபன்ஸ் காரிடர்' திட்டத்தில், 2 லட்சம் பேருக்கு வேலை என்று, பல திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. பிரதமர் மோடிக்கு எதிராக, தமிழகத்தில் பொய் பிரசாரத்தை, தி.மு.க., கட்டவிழ்த்து விட்டிருக்கிறது. அது மக்கள் மத்தியில் எடுபடாது. அதை முறியடிக்க நடத்தப்பட்டது தான், 'என் மண்; என் மக்கள்' யாத்திரை.
இந்தியாவிலேயே அதிக ஓட்டு எண்ணிக்கை வித்தியாசத்தில், கோவை லோக்சபா தொகுதியை வெற்றிபெற வைக்க வேண்டும். கோவை பா.ஜ.,வின் கோட்டை என்பதை நிரூபிக்க, நாம் அனைவரும் தாமரைக்கு ஓட்டளிக்க வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.
கோவையில் இந்து மக்கள் கட்சி சார்பில், தேர்தல் பிரசார துவக்க விழா கூட்டத்தில் பங்கேற்க வந்த நடிகை கஸ்துாரி, நிருபர்களிடம் கூறுகையில், ''மத்தியில் மோடி தான் ஆட்சி அமைப்பார். இந்த தேர்தலில் பா.ஜ., 400 தொகுதிகளில் வெற்றி பெறும். விஜய் கட்சி பற்றி, நான் இப்போது கருத்து சொல்ல முடியாது. நடிகர்கள் அரசியலில் வெற்றி பெறுவார்கள் என்ற வரலாறு, தமிழகத்தில் இனி இல்லை,'' என்றார்.

