தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/கோவைக்கு நகர்ப்புற வளர்ச்சி குழுமம் உடனே தேவை அடுத்தகட்ட வளர்ச்சி சாத்தியமாகும்

கோவைக்கு நகர்ப்புற வளர்ச்சி குழுமம் உடனே தேவை அடுத்தகட்ட வளர்ச்சி சாத்தியமாகும்

கோவைக்கு நகர்ப்புற வளர்ச்சி குழுமம் உடனே தேவை அடுத்தகட்ட வளர்ச்சி சாத்தியமாகும்


ADDED : மே 28, 2026 04:54 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : மே 28, 2026 04:54 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

கோவை, நகரின் அடுத்த கட்ட வளர்ச்சிக்கு உதவும் வகையில், கோவை நகர்ப்புற வளர்ச்சி குழுமத்தை (Coimbatore Urban Development Authority) விரைந்து பயன்பாட்டிற்கு கொண்டு வரவேண்டும் என்கின்றனர் தொழில்துறையினர். இந்த கோரிக்கை நீண்டகாலமாக உள்ளது. 2021ம் ஆண்டு தி.மு.க. ஆட்சியில் கோவை நகர்ப்புற வளர்ச்சி குழுமம் அமைக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது. 5 ஆண்டுகளாகியும் அது பயன்பாட்டிற்கு வரவில்லை.

நகர வளர்ச்சியின் முக்கியத்துவத்தை புரிந்து, தற்போதைய புதிய ஆட்சியிலாவது பயன்பாட்டுக்கு கொண்டு வர வேண்டும் என்கிறார், 'கிரடாய்' கோவை நிர்வாகக்குழு உறுப்பினர் அபிஷேக்.

''45,000 சதுரடிக்கு மேற்பட்ட கட்டட அனுமதிக்கு சென்னை செல்ல வேண்டியுள்ளதால் அனுமதி வாங்க தாமதமாகிறது. கோவை நகர்ப்புற வளர்ச்சி குழுமம் வந்துவிட்டால் உள்கட்டமைப்பு தொடர்பான நிர்வாக முடிவுகளை கோவையிலேயே விரைந்து எடுக்க முடியும்.

அரசுத்துறை தகவல் தொடர்பும் எளிதாகும். நகர் ஊரமைப்புத்துறையில் சென்னைக்கு அடுத்து கோவையில் தான் அதிக திட்ட அனுமதிகள் பெறப்படுகின்றன. கோவை நகர்பகுதியில் மட்டுமே மாதம் சராசரியாக 300 திட்ட அனுமதிகள் பெறப்படுகின்றன.

வளர்ச்சி குழுமத்தை செயல்படுத்தினால் தான் 2041 மாஸ்டர் பிளானையும் விரைந்து அமல்படுத்த முடியும்,'' என்கிறார் அவர்.

கொங்கு குளோபல் போரம் இயக்குநர் சதீஷ் கூறுகையில், கோவை மாவட்டம் நாளுக்கு நாள் விரிவடைந்து கொண்டிருக்கிறது. பசுமை பரப்பளவு எவ்வளவு இருக்க வேண்டும், குடிநீர் விநியோகம், சாலை கட்டமைப்பு எப்படி திட்டமிட வேண்டும் என்பதையும் வளர்ச்சி குழுமம் முடிவு செய்யும்.

போக்குவரத்தை மேம்படுத்த யு.எம்.டி.ஏ (Unified Metropolitan Transport Authority) அவசியம். நகர்ப்புற வளர்ச்சி குழுமம் இருந்தால்தான் அதை உருவாக்க முடியும்.

பேருந்து, ரயில், மெட்ரோ, ஆட்டோ போக்குவரத்துகளை எப்படி பயன்படுத்துவது என்பதை ஆராய்ந்து முடிவு செய்வார்கள். கோவை நகர்ப்புற வளர்ச்சி குழுமத்தை விரைந்து செயல்படுத்தினால் மாவட்டம் முழுவதும் வளர்ச்சி அடையும், என்றார்.

தமிழக முதல்வர் விஜய் கவனத்துக்கு இக்கோரிக்கையை, அவரது இரு அமைச்சர்களும் கொண்டு செல்வார்கள் என்று நம்புவோம்!

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us