/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகம் அமைக்க ஆய்வு
/
ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகம் அமைக்க ஆய்வு
ADDED : ஜூலை 31, 2011 03:03 AM
பொள்ளாச்சி : பொள்ளாச்சியில், ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகம் அமைக்க, நகரப்
பகுதியில் ஆய்வு செய்யப்பட்டது.ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்துக்கு இடம்
தேர்வு செய்ய, அரசு உத்தரவிட்டுள்ளது.
பொள்ளாச்சி நகரப்பகுதியில் உள்ள
இடங்களை ஆய்வு செய்யும் பணி நேற்று நடந்தது. ஆர்.டி.ஓ., அழகிரிசாமி,
சார்பு நீதிபதி குருமூர்த்தி, மாவட்ட உரிமையியல் நீதிபதி மோகனவள்ளி,
மாஜிஸ்திரேட் மதுரசேகரன் மற்றும் வக்கீல்கள், நான்கு இடங்களை ஆய்வு
செய்தனர்.ஆர்.டி.ஓ., அழகிரிசாமி கூறுகையில், ''ஒருங்கிணைந்த நீதிமன்ற
வளாகம் அமைக்க, 3 ஏக்கரில் இடம் தேவைப்படுகிறது. நகராட்சிக்கு சொந்தமான
இடங்கள் ஆய்வு செய்யப்பட்டது. மரப்பேட்டை பூங்கா, மகாலிங்கபுரம் சர்க்கஸ்
மைதானம், சமத்தூர் ராமஐயங்கார் நகராட்சி மேல்நிலைப்பள்ளி வளாகத்தில்
பயன்பாடின்றி உள்ள இடம், கோவை சாலையில் நெடுஞ்சாலைத் துறைக்கு எதிரிலுள்ள
இடங்கள் ஆய்வு செய்யப்பட்டது. எந்த இடம் கிடைத்தாலும், நீதிமன்ற வளாகம்
அமைக்க ஏற்றதாக இருக்கும் என, நீதிபதிகள் தெரிவித்தனர். மாவட்ட நிர்வாகம்
மூலம் அரசுக்கு பரிந்துரை செய்து, நில மாறுதல் செய்ய நடவடிக்கை
எடுக்கப்படும்,'' என்றார்.