/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
"நலவாரிய பணப்பயன்கள் மாநில அரசு அறிவிக்கணும்'
/
"நலவாரிய பணப்பயன்கள் மாநில அரசு அறிவிக்கணும்'
ADDED : ஆக 01, 2011 10:26 PM
கோவை : 'முறைசாரா தொழிலாளர் நலவாரிய நடவடிக்கைகள் குறித்து, தமிழக அரசு அறிவிப்பு வெளியிட வேண்டும்' என, சி.ஐ.டி.யு., கோரிக்கை விடுத்துள்ளது.
கோவை மாவட்ட பொது தொழிலாளர் சங்கம் (சி.ஐ.டி.யு.,) சார்பில், 6வது மாவட்ட பேரவை கூட்டம் குஜராத் சமாஜத்தில் நடந்தது. சங்கத்தின் முன்னாள் மாவட்ட தலைவர் முனியப்பன் தலைமை வகித்தார். கவுன்சிலர் கனகமணி வரவேற்றார். ஓட்டல் தொழிலாளர் சங்க பொதுச் செயலாளர் ராஜா கொடியேற்றி வைத்தார். எம்.பி., நடராஜன் வாழ்த்துரை வழங்கினார். சி.ஐ.டி.யு., மாநிலக்குழு உறுப்பினர் பத்மநாபன் பேசுகையில்,''பல்வேறு சலுகைகளை அறிவித்துள்ள தமிழக அரசு, மூன்று கோடி பேர் உள்ள முறைசாரா தொழிலாளர் நலவாரியம் பற்றி எந்த அறிவிப்பும் செய்யவில்லை. இது, வருந்தத்தக்கது. கடந்த அக்., மாதத்தில் இருந்து பணப்பயன் நிறுத்தப்பட்டுள்ளது. நலவாரியம் குறித்த அறிவிப்பு வெளியிட வேண்டும்'' என்றார். மத்திய மாநில அரசுகள், வீட்டு பணியாளர்களுக்கு குறைந்தபட்ச கூலியை நிர்ணயம் செய்தல்; சாலையோர வியாபாரிகளை மனிதாபிமானத்தோடு, போலீசார் நடத்த வேண்டும் என, பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. பொதுத்தொழிலாளர் சங்க கமிட்டி உறுப்பினர் முத்துசாமி நன்றி கூறினார். கூட்டத்தில், மாவட்ட பொது செயலாளர் நெல்சன் பாபு, மாநில உழைக்கும் பெண்கள் ஒருங்கிணைப்புக்கு குழு ராஜி, உள்ளாட்சி ஊழியர் சங்க பொது செயலாளர் செல்வராஜ், தையல் சங்க பொது செயலாளர் வேலுசாமி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.