sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, பிப்ரவரி 28, 2026 ,மாசி 16, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கோயம்புத்தூர்

/

இலவச சைக்கிள் பெறும் மாணவர் விபரம் ஆன்-லைனில் பதிவு செய்ய அறிவுறுத்தல்

/

இலவச சைக்கிள் பெறும் மாணவர் விபரம் ஆன்-லைனில் பதிவு செய்ய அறிவுறுத்தல்

இலவச சைக்கிள் பெறும் மாணவர் விபரம் ஆன்-லைனில் பதிவு செய்ய அறிவுறுத்தல்

இலவச சைக்கிள் பெறும் மாணவர் விபரம் ஆன்-லைனில் பதிவு செய்ய அறிவுறுத்தல்


ADDED : ஆக 03, 2011 01:31 AM

Google News

ADDED : ஆக 03, 2011 01:31 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பொள்ளாச்சி : பொள்ளாச்சி கல்வி மாவட்டத்தில், இலவச சைக்கிள் குறித்த மாணவர் விபரம் 'ஆன்-லைன்' மூலம் பதிவு செய்ய பள்ளிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

தமிழகத்தில், அரசு பள்ளிகளில் படிக்கும் மேல்நிலைப்பிரிவு மாணவர்களுக்கு இலவச சைக்கிள் வழங்கப்படுகிறது. இதற்கான மாணவர்கள் குறித்த பட்டியல் அந்தந்த மாவட்ட கல்வி அலுவலகம் மூலம் பெறப்பட்டு, முதன்மை கல்வி அலுவலகத்தில் ஒப்படைக்கப்படும். இம்முறையை மாற்றி, நடப்பாண்டில் ஒவ்வொரு பள்ளிகளுக்கும் வழங்கப்பட்டுள்ள 'ஆன்-லைன்' வசதியை பயன்படுத்தி, மாணவர்கள் விபரங்களை பதிவு செய்ய அறிவுறுத்தப்பட்டுள்ளது. பொள்ளாச்சி கல்வி மாவட்டத்தில், நகராட்சி, அரசு, அரசு உதவிப்பெறும் பள்ளிகளில் படிக்கும் மாணவ, மாணவிகள், பிரிவு உள்ளிட்ட விபரங்கள் ஆன்-லைனில் பதிவு செய்யும் பணி நடக்கிறது. இப்பணியை இம்மாத இறுதிக்குள் நிறைவு செய்ய அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதை அடிப்படையாக கொண்டு நடப்பாண்டில் தேவைப்படும் இலவச சைக்கிள் குறித்த பட்டியல் தயாரிக்கப்படும். பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வில் தோல்வி அடைந்து மறுத்தேர்வு மூலம் தேர்வாகும் மாணவர்கள் பள்ளியில் சேர்ந்த பின் இறுதி பட்டியல் தயாரிக்கப்பட்டு மாணவர்களுக்கு சைக்கிள் வழங்கும் பணி துவங்கப்படும். கல்வித்துறை அதிகாரிகள் கூறியதாவது: இலவச சைக்கிளை பொறுத்தவரை, அரசு ஒப்பந்தம் பெற்றுள்ள நிறுவனத்திற்கு சைக்கிள் உதிரி பாகங்கள் பொருத்த 'டெண்டர்' வழங்கும். ஒவ்வொரு கல்வி மாவட்டத்திற்கு தேவைப்படும் சைக்கிள் உதிரி பாகங்கள், ஒரு பள்ளிக்கு கொண்டு வரப்பட்டு பொருத்திய பின் அனைத்து பள்ளிகளுக்கும் அனுப்பப்படும். கல்வியாண்டின் துவக்கத்தில் பள்ளி வாரியாக மாணவர் பட்டியல் பெற்று உத்தேச பட்டியல் தயாரிக்கப்படும். நடப்பாண்டில் ஆன்-லைன் மூலம் மாணவர்கள் பட்டியல் பதிவு செய்யப்படுவதால், பணிகளும் எளிதாக நிறைவடையும். வரும் செப்., முதல் வாரத்தில் மாணவர்களுக்கு இலவச சைக்கிள் வழங்கப்படும் என எதிர்பார்க்கிறது, என்றனர்.






      Dinamalar
      Follow us