/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
ஆடிப்பெருக்கு: 20 சிறப்பு பஸ்கள் இயக்கம்
/
ஆடிப்பெருக்கு: 20 சிறப்பு பஸ்கள் இயக்கம்
ADDED : ஆக 03, 2011 01:31 AM
பொள்ளாச்சி : ஆடிப்பெருக்கு பண்டிகையையொட்டி பொள்ளாச்சியில் இருந்து ஆனைமலை, ஆழியாறு உட்பட பல்வேறு இடங்களுக்கு பொள் ளாச்சி கோட்டம் சார்பில் 20 சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகின்றன.
பொள்ளாச்சியை சேர்ந்த மக்கள் ஆழியாறுஅணை, ஆழியாறு ஆறு, ஆதாளியம்மன் கோவில் பகுதிகளில் மக்கள் குடும்பம் சகிதமாக வந்திருந்து, ஆடி பதினெட்டாம் பெருக்கை கொண்டாடுவர். இதனால், இப்பகுதிகளில் கூட்டம் அதிகளவில் இருக்கும். பொள்ளாச்சி கோட்ட போக்குவரத்துக்கழக அதிகாரிகள் கூறியதாவது: ஆனைமலை மாசாணியம்மன் கோவிலுக்கு கூடுதலாக எட்டு பஸ்களும், இப்பகுதியிலுள்ள காளியம்மன் கோவிலுக்கு ஒரு பஸ்சும், ஆழியாறு பகுதிக்கு கூடுதலாக ஒரு பஸ்சும் இயக்கப்படுகின்றன. மேட்டுபாளையம் வனபத்ரகாளியம்மன் கோவிலுக்கு கோவையிலிருந்து இயக்கும் வகையிலும், திருமூர்த்தி மலை செல்ல உடுமலையிலிருந்து பஸ் இயக்கும் வகையிலும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மொத்தம் 20 பஸ்கள் நாளை (இன்று) இயக்க திட்டமிடப்பட்டுள்ளது. பழநி வழித்தடத்தில் கூட்டம் அதிகளவில் இருந்தால், உடனடியாக சிறப்பு பஸ் இயக்கப்படும். ஆனைமலை, ஆழியாறு உள்ளிட்ட முக்கிய இடங்களில், டிக்கெட் பரிசோதகரும், கூடுதலாக பணியாளர்களும் நியமிக்கப்படவுள்ளனர். பயணிகளின் கூட்ட நெரிசலுக்கேற்ப பஸ்களை மாற்றி இயக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. பஸ்களில், கூடுதல் கட்டணம் வசூலிக்காமல், வழக்கமான கட்டணத்தை வசூலிக்கவே அறிவுறுத்தப்பட்டுள்ளது, என்றனர்.