sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, மார்ச் 06, 2026 ,மாசி 22, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கோயம்புத்தூர்

/

அனுமதி பெறாமல் செயல்பட்ட கேபிள் "டிவி' ஒளிபரப்பு முடக்கம்

/

அனுமதி பெறாமல் செயல்பட்ட கேபிள் "டிவி' ஒளிபரப்பு முடக்கம்

அனுமதி பெறாமல் செயல்பட்ட கேபிள் "டிவி' ஒளிபரப்பு முடக்கம்

அனுமதி பெறாமல் செயல்பட்ட கேபிள் "டிவி' ஒளிபரப்பு முடக்கம்


ADDED : ஆக 03, 2011 01:34 AM

Google News

ADDED : ஆக 03, 2011 01:34 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சரவணம்பட்டி : ''முறையான அனுமதி பெறாத மூன்று உள்ளூர் கேபிள் 'டிவி' ஒளிபரப்பு தற்காலிகமாக ரத்து செய்யப்பட்டுள்ளது.

இந்த நிறுவனங்களில் இருந்த கருவிகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன,'' என, கோவை போலீஸ் கமிஷனர் அமரேஷ் புஜாரி தெரிவித்தார். சரவணம்பட்டியில், நிருபர்களுக்கு அவர் அளித்த பேட்டி: கோவையில் நில மோசடி வழக்கு தொடர்பாக, இதுவரை 80 புகார்கள் வந்துள்ளன. இவற்றை விசாரணை செய்து குற்ற பின்னணி உள்ள 12 வழக்குகள் விசாரிக்கப்பட்டு வருகின்றன. இதுவரை ஐந்து பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். மீதமுள்ள வழக்குகளின் தன்மையை ஆராய்ந்து வருகிறோம். சிவில் அல்லாத மோசடி வழக்குகளில் குற்றவாளிகள் கைது செய்யப்படுவர். கோவை நகரில் செயல்பட்டு வந்த கோவை 'டிவி', ஜெயம் உட்பட மூன்று 'டிவி'க்கள் உரிய லைசென்ஸ் இல்லாமல் செயல்பட்டு வந்தது. இவற்றை ஆய்வு செய்து விசாரணை மேற்கொண்டு, விரைவில் லைசென்ஸ் பெற வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. 10 நாட்கள் வரை கால அவகாசம் கொடுக்கப்பட்டுள்ளது. லைசென்ஸ் சமர்ப்பிக்க தவறும்பட்சத்தில், நீதிபதியின் ஒப்புதலுக்கு பின் வழக்கு பதிவு செய்யப்படும். இவ்வாறு,போலீஸ் கமிஷனர் தெரிவித்தார்.






      Dinamalar
      Follow us