sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, மார்ச் 06, 2026 ,மாசி 22, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கோயம்புத்தூர்

/

11 அடி நீள மலைப்பாம்பு மீட்பு

/

11 அடி நீள மலைப்பாம்பு மீட்பு

11 அடி நீள மலைப்பாம்பு மீட்பு

11 அடி நீள மலைப்பாம்பு மீட்பு


ADDED : ஆக 19, 2011 01:35 AM

Google News

ADDED : ஆக 19, 2011 01:35 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஆனைமலை:ஆனைமலை அருகே கெங்கம்பாளையம் கிராமத்தில் ரோட்டோரத்தில் இருந்த 11 அடி நீள மலைப்பாம்பை மீட்டு வனத்துறையினர் வனப்பகுதியில் விட்டனர்.பெத்தநாயக்கனூர் ஊராட்சிக்கு உட்பட்ட கெங்கம்பாளையம் கிராமத்தில் ரோட்டோரத்தில் இருந்த மலைப்பாம்பை பார்த்த ஊராட்சி தலைவர் லோகநாதன் பொள்ளாச்சி வனச்சரக அலுவலருக்கு தகவல் கொடுத்தார்.பொள்ளாச்சி வனச்சரக அலுவலர் வீரமணி உத்தரவின் பேரில் வனக்காப்பாளர்கள் ரமேஷ், சிவக்குமார், வனக்காவலர்கள் சந்திரசேகரன், மதிவாணன் மற்றும் வேட்டைதடுப்பு காவலர் காளிதாஸ் ஆகியோர் ரோட்டோரத்தில் இருந்த மலைப்பாம்பை மீட்டனர்.

வனத்துறை அதிகாரிகள் கூறும்போது, பெத்தநாயக்கனூர் ஊராட்சிக்கு உட்பட்ட கெங்கம் பாளையம் பகுதியில் பாலாறு செல்கிறது. இதன் அருகில் உள்ள ரோட்டோரத்தில் மலைப்பாம்பு இருந்தது. அதை மீட்டு ஆழியார் வனப்பகுதியில் விட்டுவிட்டோம். மலைப்பாம்பு 11 அடி நீளம் இருக்கும். மழைக்காலம் என்பதால் ஆற்று நீரின் வழியாக வந்திருக்கலாம் என்றனர்.






      Dinamalar
      Follow us