sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், மார்ச் 05, 2026 ,மாசி 21, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கோயம்புத்தூர்

/

புதுப்பிக்கத்தக்க ஆற்றல் நாள் விழா: பார்வையாளர்கள் வியப்பு

/

புதுப்பிக்கத்தக்க ஆற்றல் நாள் விழா: பார்வையாளர்கள் வியப்பு

புதுப்பிக்கத்தக்க ஆற்றல் நாள் விழா: பார்வையாளர்கள் வியப்பு

புதுப்பிக்கத்தக்க ஆற்றல் நாள் விழா: பார்வையாளர்கள் வியப்பு


ADDED : ஆக 20, 2011 11:31 PM

Google News

ADDED : ஆக 20, 2011 11:31 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பொள்ளாச்சி:பொள்ளாச்சி மகாலிங்கம் பொறியியல் கல்லூரியில், 'புதுப்பிக்கத்தக்க ஆற்றல் நாள்' விழா நடந்தது. மின்னியல் மற்றும் மின்னணுவியல் துறை தலைவர் லட்சுமிநரசிம்மன் வரவேற்றார். கல்லூரி முதல்வர் செந்தூர் பாண்டியன் தலைமை வகித்தார்.விழாவில், 'எந்த கருத்தை சமுதாயத்துக்கு சொல்ல வேண்டுமானாலும், மாணவர்களிடம் முதலில் தெரிவிக்க வேண்டும். மாணவச் சமுதாயம் விழிப்புணர்வு பெற்றால் அந்த குடும்பமும், கிராமமும் விழிப்புணர்வு பெறும்.

இயற்கை சக்திகளை பயன்படுத்தி, மின் ஆற்றல் பெறும் முறைகளில் மாணவர்கள் விழிப்புணர்வு பெற வேண்டும். சூரிய ஒளி, தண்ணீர், காற்று, பயோ காஸ் போன்றவற்றை, புதுப்பிக்கத்தக்க ஆற்றலாக மாற்ற வேண்டும். அப்போது தான், மின்பற்றாக்குறையை சமாளிக்க முடியும். வீடுகளில் குண்டு பல்பு பயன்படுத்துவதை தவிர்த்து, 'சிஎப்எல்' பல்புகளை பயன்படுத்த வேண்டும். காற்றின் வேகம் மணிக்கு 15 கி.மீ., வேகத்துக்கு மேல் இருந்தால் தான் மின் உற்பத்தி மேற்கொள்ள முடியும். ஆனால், எப்போதும் கிடைக்கும் சூரிய ஒளியில் இருந்து மின்னாற்றல் எடுத்தால் பற்றாக்குறையை போக்க முடியும்' என, மாணவர்களுக்கு அறிவுறுத்தப்பட்டது.

பொள்ளாச்சி பி.கே.டி., கல்வி நிறுவனங்களின் தலைவர் டாக்டர் முத்துக்குமாரசாமி, என்.ஐ.ஏ., பள்ளிகளின் நிர்வாக அலுவலர் சின்னசாமி பேசினர். விரிவாக்க சேவை அலுவலர் நாகராஜ், ஓய்வு பெற்ற அறிவியல் ஆசிரியர் முகமது செரீப் கலந்து கொண்டனர். பொள்ளாச்சி பகுதியிலிருந்து 9 பள்ளிகளை சேர்ந்த மாணவர்கள் 130 பேர்,

67 படைப்புகளை காட்சிப்படுத்தி இருந்தனர். சோலார் பவர் ஆட்டோமேட்டிக் சிக்னல், சோலார் பவரில் இயங்கும் செக்யூரிட்டி அலாரம், சூரிய ஒளியை பயன்படுத்தி மொபைல் போன் பேட்டரி சார்ஜ் செய்தல், வீட்டு மோட்டார்களில் மின்சாரம் வீணாவதை தவிர்ப்பது, சூரிய ஒளியில் இயங்கும் தெளிப்பான் கருவி, காற்றாலை மின் உற்பத்தி போன்ற மாணவர்களின் படைப்புகள், பார்வையாளர்களை வியக்க வைத்தன. கல்லூரி பேராசிரியர் சக்திவேல் நன்றி கூறினார்.






      Dinamalar
      Follow us