/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
"ராகிங்' புகார் அனுப்ப கல்லூரிகளில் 100 தபால் கவர்கள் வைக்க எஸ்.பி., உத்தரவு
/
"ராகிங்' புகார் அனுப்ப கல்லூரிகளில் 100 தபால் கவர்கள் வைக்க எஸ்.பி., உத்தரவு
"ராகிங்' புகார் அனுப்ப கல்லூரிகளில் 100 தபால் கவர்கள் வைக்க எஸ்.பி., உத்தரவு
"ராகிங்' புகார் அனுப்ப கல்லூரிகளில் 100 தபால் கவர்கள் வைக்க எஸ்.பி., உத்தரவு
ADDED : ஆக 22, 2011 10:59 PM
கோவை : ''ராகிங் கொடுமையால் பாதிக்கப்படும் மாணவ,மாணவியர் நேரடியாக எஸ்.பி.,க்கு தகவல் அனுப்ப 100 தபால் கவர்கள் ஒவ்வொரு கல்லூரியிலும் வைக்கப்படும்'' என, மாவட்ட எஸ்.பி., உமா தெரிவித்தார்.
அவர் அளித்த பேட்டி: கோவை மாவட்டத்தில் கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள் 52 செயல்படுகின்றன. தவிர, 22 இன்ஜினியரிங் கல்லூரிகள், ஐந்து பல்கலைக்கழகங்கள், இரண்டு அலோபதி கல்லூரிகள் மற்றும் வனக்கல்லூரி, சட்டக்கல்லூரிகள் உள்ளன. இக்கல்லூரிகளில் ஆயிரக்கணக்கான மாணவ, மாணவியர் படிக்கின்றனர். சமீப காலமாக கல்லூரிகளில் ராகிங் கொடுமை அதிகரித்துள்ளன. இதனால் புதிதாக கல்லூரிக்கு வரும் ஜூனியர் மாணவ,மாணவியர் பெரும் அவஸ்தைக்கும், சங்கடத்துக்கும் உள்ளாகின்றனர். இதை தடுக்க கல்லூரி முதல்வர்கள், மாணவ, மாணவியர், போலீஸ் அதிகாரிகள் பங்கேற்கும் ஆலோசனைக் கூட்டங்கள் விரைவில் நடக்க உள்ளது. ராகிக் பற்றி மாணவ,மாணவியர் எஸ்.பி.,க்கு நேரடியாக புகார் தெரிவிக்கும் வகையில், ஒவ்வொரு கல்லூரியிலும் எஸ்.பி.,யின் முகவரியுடன் கூடிய 100 கவர்கள் வைக்கப்படும். ராகிங் பாதிப்புக்கு உள்ளாகும் மாணவ,மாணவியர் இதை பயன்படுத்தலாம். தவிர இமெயில் மற்றும் 0422 - 2220077 என்ற டெலிபோன் எண்ணில் 24 மணி நேரமும் தொடர்பு கொள்ளலாம். புகார் விசாரிக்கப்பட்டு, கடும் நடவடிக்கை எடுக்கப்படும். கோவை மாவட்டத்தில் 817 போலீசார் பணியில் உள்ளனர். 625 போலீஸ் பணியிடங்கள் காலியாக உள்ளன. சமீபத்தில் ஆயுதப்படைப்பிரிவில் இருந்து 125 கான்ஸ்டபிள்கள் லோக்கல் ஸ்டேஷன்களில் பணியமர்த்தப்பட்டுள்ளனர். மாவட்டத்தில் மேட்டுப்பாளையம், பொள்ளாச்சி கிழக்கு, சூலூர், வடவள்ளி மற்றும் துடியலூர் போலீஸ் ஸ்டேஷன்கள் முழு அளவிலான போலீஸ் எண்ணிக்கை(இரண்டு இன்ஸ்பெக்டர்கள் உள்பட 80 பேர்) கொண்ட ஸ்டேஷன்களாக விரைவில் தரம் உயர்த்தப்படும்.10 ஸ்டேஷன்கள் 60 போலீசார் பணியாற்றும் போலீஸ் ஸ்டேஷனாக மாற்றப்படும். ஸ்டேஷன்களில் போலீசாரின் எண்ணிக்கை கூடுவதால், அப்பகுதிகளின் சட்டம் - ஒழுங்கு பாதுகாக்கப்படும். ரோந்து எண்ணிக்கை அதிகரிக்கப்பட்டு குற்றச் செயல்கள் குறைக்கப்படும்.இவ்வாறு, எஸ்.பி.,உமா தெரிவித்தார்.