ADDED : செப் 02, 2011 11:06 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பொள்ளாச்சி : பொள்ளாச்சி அடுத்த நாச்சிபாளையத்தில் பகுதி நேர ரேஷன் கடையை எம்.பி., சுகுமார் திறந்து வைத்தார்.பொள்ளாச்சி தெற்கு ஒன்றியம், பழையூர் ஊராட்சியில் நாச்சிபாளையம் கிராமம் உள்ளது.
நாச்சிபாளையம் மக்கள், பகுதி நேர ரேஷன் கடை வேண்டிய கரட்டுப்பாளையத்தில் சமீபத்தில் சாலை மறியலில்
ஈடுபட்டனர். மேலும், கலெக்டருக்கு மனு அனுப்பினர். இதையடுத்து, நாச்சிபாளையத்தில் பகுதி நேர ரேஷன் கடை அமைக்க அரசு உத்தரவிட்டது. பகுதி நேர ரேஷன் கடை திறப்பு விழா நடந்தது. பொள்ளாச்சி எம்.பி., சுகுமார் ரேஷன் கடையை திறந்து வைத்து, பொருட்கள் வினியோகத்தை துவக்கி வைத்தார். எம்.ஜி.ஆர்., இளைஞரணி செயலாளர் விஜயகுமார், கூட்டுறவு சங்க செயலாளர் மகேந்திரன், ஊராட்சி செயலாளர் தங்கமுத்து உட்பட பலர் பங்கேற்றனர்.