sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, பிப்ரவரி 20, 2026 ,மாசி 8, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கோயம்புத்தூர்

/

பத்திரகாளியம்மன் கோவில் கும்பாபிஷேகம்: சிறப்பு பஸ் வசதி

/

பத்திரகாளியம்மன் கோவில் கும்பாபிஷேகம்: சிறப்பு பஸ் வசதி

பத்திரகாளியம்மன் கோவில் கும்பாபிஷேகம்: சிறப்பு பஸ் வசதி

பத்திரகாளியம்மன் கோவில் கும்பாபிஷேகம்: சிறப்பு பஸ் வசதி


ADDED : செப் 15, 2011 11:32 PM

Google News

ADDED : செப் 15, 2011 11:32 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பெ.நா.பாளையம்:பெரியநாயக்கன்பாளையம் அருகே மாரியம்மன், பத்திரகாளியம்மன் கோவில் கும்பாபிஷேகத்தையொட்டி சிறப்பு பஸ் வசதி செய்யப்பட்டுள்ளது.பெரியநாயக்கன்பாளையம் ஒன்றியம், பிளிச்சி ஊராட்சிக்குட்பட்ட ஒன்னிபாளையம், ஒன்னிபாளையம்புதூர், கரிச்சிபாளையம் கிராமங்களுக்குட்பட்ட பகுதியில் மாரியம்மன், பத்திரகாளியம்மன் கோவில்கள் உள்ளன. சிதிலமடைந்த இக்கோவில்கள் தற்போது, புதியதாக கருங்கற்களால் கருவறை, விமானம், அர்த்தமண்டபம், மகாமண்டபம் கட்டப்பட்டு, திருப்பணிகள் செய்து முடிக்கப்பட்டுள்ளன. இக்கோவில்களுக்கான கும்பாபிஷேகம் நாளை வெள்ளிக்கிழமை காலை 7.00 மணிக்கு நடக்கிறது.

நிகழ்ச்சிக்கு பேரூராதீனம் ராமசாமி அடிகளார், சிரவை ஆதீனம் குமரகுருபர சுவாமிகள், இளைய பட்டம் மருதாசல அடிகளார் ஆகியோர் தலைமை வகிக்கின்றனர். விழாவில், பேராசிரியர் சூரிய நாராயணன்,' சிந்தனை துளிகளும், சிரிப்பு மலர்களும்' என்ற தலைப்பில் பேசுகிறார். காலை 10.00 மணி முதல் அன்னதானம் நடக்கிறது.

கும்பாபிஷேக விழாவையொட்டி வெள் ளிக்கிழமை அதிகாலை முதல் காரமடை, பிளிச்சி, பெரியநாயக்கன்பாளையம் வழியாக சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகின்றன.






      Dinamalar
      Follow us