/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
தார் ரோட்டுக்காக 15 ஆண்டு போராட்டம்: கலெக்டரிடம் புகார்
/
தார் ரோட்டுக்காக 15 ஆண்டு போராட்டம்: கலெக்டரிடம் புகார்
தார் ரோட்டுக்காக 15 ஆண்டு போராட்டம்: கலெக்டரிடம் புகார்
தார் ரோட்டுக்காக 15 ஆண்டு போராட்டம்: கலெக்டரிடம் புகார்
ADDED : செப் 15, 2011 11:33 PM
அன்னூர்:அன்னூரில் வளர்ச்சி பணிகளை கோவை கலெக்டர் ஆய்வு செய்தார். அவரிடம்,
'15 ஆண்டுகளாக நாதே கவுண்டன்புதூருக்கு ரோடுபோட கோரி போராடி வருகிறோம்,'
என, மக்கள் புகார் தெரிவித்தனர்.'நபார்டு' திட்டத்தில் குன்னத்தூர்புதூரில்
இருந்து கோவில்பாளையம் இணைப்பு சாலை வரை 2.60 கி.மீ., தூரத்திற்கு 3.75
மீட்டர் அகலத்திற்கு 33 லட்சம் ரூபாயில் இரண்டு அடுக்கு மெட்டல் அமைத்து
தார் சாலை போடப்பட்டுள்ளது. இப்பணியை கலெக்டர் கருணாகரன் நேற்று ஆய்வு
செய்தார். ரோட்டில் அரை அடி ஆழத்திற்கு தோண்டி, நிர்ணயிக்கப்பட்ட தடிமன்
அளவுக்கு மெட்டல் போடப்பட்டு, தார் ஊற்றப்பட்டுள்ளதா என ஆய்வு செய்தார்.
உடன் மாவட்ட திட்ட அலுவலர் மனோகர் சிங், செயற்பொறியாளர் ஆகியோர்
பங்கேற்றனர். குன்னத்தூர் அரசு துவக்கப்பள்ளிக்கு சென்று, அண்ணா பிறந்த
நாளை முன்னிட்டு மாணவர்களுக்கு சர்க்கரை பொங்கல் தயாரிப்பதை
பார்வையிட்டார். சத்துணவு மையத்தில் இருந்த முட்டைகள் அரசு நிர்ணயித்த எடை
உள்ளதா என எடை பார்க்கும் கருவியில் வைத்து சோதனை செய்தார்.குன்னத்தூர்
ஒருங்கிணைந்த மகளிர் மற்றும் சுகாதார வளாகத்தில் ஆய்வு செய்தார்.
'காலை
மற்றும் இரவு மட்டும் துப்புரவு செய்தால், வளாகம் தூய்மையாக இருக்காது,
முழுநேர பணியாளர் நியமிக்க வேண்டும்' என. குழுவிற்கு
அறிவுறுத்தினார்.கலெக்டரிடம், ஊராட்சி தலைவர் ராமலிங்கம் மற்றும்
பொதுமக்கள் கூறுகையில்,'' மெயின்ரோட்டில் இருந்து நாதே கவுண்டன்புதூர்
செல்லும் பாதையில் ரோடு போட வலியுறுத்தி, 15 ஆண்டுகளாக போராடி வருகிறோம்.
ரோடு வசதி இல்லாமல் அங்கிருந்த பள்ளியை மூடி விட்டனர். அந்த ஊருக்கு பஸ்
விடவும் மறுக்கின்றனர். உடனே ரோடு போட நடவடிக்கை எடுக்க வேண்டும்,''
என்றனர். ஆய்வில் பி.டி.ஓ.,க்கள் பூபதி, சுப்ரமணியம், ஒப்பந்ததாரர்
நந்தகுமார் மற்றும் அதிகாரிகள் பங்கேற்றனர். இக்கோரிக்கை குறித்து
பார்க்கும்படி செயற்பொறியாளருக்கு கலெக்டர் உத்தரவிட்டார்.அல்லப்பாளையம்
ஊராட்சியில், புதுப்பாளையத்திலிருந்து மத்திரெட்டிபாளையத்திற்கு ஒரு
கி.மீ., தூரத்திற்கு 10 லட்சத்து 80 ஆயிரம் ரூபாயில் தார் ரோடு
போடப்பட்டுள்ளது. அந்த ரோட்டை ஆய்வு செய்தார். இதில் ஊராட்சி தலைவர் கண்ணன்
மற்றும் அதிகாரிகள் பங்கேற்றனர்.

