sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, பிப்ரவரி 21, 2026 ,மாசி 9, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கோயம்புத்தூர்

/

விவசாயிகள் சங்கம்அரசுக்கு கோரிக்கை

/

விவசாயிகள் சங்கம்அரசுக்கு கோரிக்கை

விவசாயிகள் சங்கம்அரசுக்கு கோரிக்கை

விவசாயிகள் சங்கம்அரசுக்கு கோரிக்கை


ADDED : செப் 15, 2011 11:54 PM

Google News

ADDED : செப் 15, 2011 11:54 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பொள்ளாச்சி:கேரளாவை போன்று தமிழகத்திலும் விவசாய நிலங்களில் வரப்பு அமைக்க அரசு உதவி செய்ய வேண்டும் என, தமிழக விவசாயிகள் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.பொள்ளாச்சி தாலுகா தமிழக விவசாயிகள் சங்க கூட்டம் துணை தலைவர் கோபாலகிருஷ்ணன் தலைமையில் நடந்தது. உதவி செயலாளர் சவுந்திரராஜ் முன்னிலை வகித்தார்.கேரளாவில் வங்கிகள் மற்றும் நிலவள வங்கிகள் அரசு உதவியுடன் விவசாய நிலங்களில் வரப்புகள் போட மீட்டருக்கு 30 ரூபாய் வீதம் கொடுக்கிறது. அதில், அரசு பங்களிப்பாக 25 ரூபாயும், விவசாயிகள் பங்காக 5 ரூபாயும் வசூலிக்கப்படுகிறது.

அதேபோன்று தமிழகத்திலும் விவசாய நிலங்களில் வரப்புகள் போட்டால் மழை நீர் வீணாகாமல் தேக்கப்பட்டு நிலத்தடி நீர்மட்டம் பாதுகாக்கப்படும். இந்த திட்டத்தை தமிழகத்தில் அனைத்து மாவட்டத்திலும் நடைமுறைப்படுத்த அரசு முன்வரவேண்டும்.இலவச மின்சாரம் தொடர்ந்து வழங்கவும், விவசாயத்திற்கு இலவச மின் இணைப்புகளை காலதாமதமின்றி வழங்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் போன்ற தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. தாலுகா செயலாளர் முத்துசாமி நன்றி கூறினார்.






      Dinamalar
      Follow us