/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
நானோ கண்டுபிடிப்புகளை உருவாக்க வேண்டும்
/
நானோ கண்டுபிடிப்புகளை உருவாக்க வேண்டும்
ADDED : செப் 15, 2011 11:55 PM
பொள்ளாச்சி:''எதிர்கால தலைமுறைக்கும் பயனுள்ள வகையில், நானோ
கண்டுபிடிப்புகளை உருவாக்க வேண்டும்,'' என, கிருஷ்ணராஜ் வாணவராயர்
பேசினார்.
பொள்ளாச்சி என்.ஜி.எம்., கல்லூரியில், இயற்பியல் துறை சார்பில் 'நானோ
அளவீடுகள் -11' என்ற தலைப்பில் தேசிய அளவிலான கருத்தரங்கு நேற்று
துவங்கியது. கருத்தரங்கு ஒருங்கிணைப்பாளர் கிறிஸ்டோபர்செல்வின்
வரவேற்றார்.கல்லூரி தலைவர் கிருஷ்ணராஜ் வாணவராயர் பேசியதாவது: அனைத்து
துறைகளிலும், நானோ டெக்னாலஜி பயன்படுத்தப்படுகிறது. குறிப்பாக, அறிவியல்
சார்ந்த துறைகளில் இதன் பயன்பாடு அதிகரித்துள்ளது.எலக்ட்ரானிக்ஸ் சார்ந்த
மின் பொருட்களில், அதிக கொள்திறன் கொண்ட கம்ப்யூட்டரை உருவாக்க முடியும்.
இதன்மூலம் குறைந்த மின்னாற்றலை மட்டும் பயன்படுத்தலாம்.கல்லூரிகளில்,
பேராசிரியர்களும், மாணவர்களும் இணைந்து நானோ டெக்னாலஜி குறித்த ஆய்வை
மேற்கொள்ள வேண்டும்.
தற்போது, நடக்கும் இந்த கருத்தரங்கு மூலம்
மாணவர்களுக்கும், ஆராய்ச்சியாளர்களுக்கும் பல புதிய தகவல்கள் கிடைக்கும்.
அவற்றை எதிர்கால முன்னேற்றத்திற்கு பயன்படுத்த முடியும்.நானே டெக்னாலஜி
குறித்து ஆய்வு செய்யும் போது, அதன் நிறைகளை மட்டுமின்றி குறைகளையும்
சேர்த்து ஆய்வு செய்ய வேண்டும். குறைகளை களையும் வகையில், தேவையான
நிவர்த்திகளை ஏற்படுத்த வேண்டும். நானோ தொடர்பான ஆய்வுகளுக்கு, அரசும்
நிதியுதவி அளித்து பல்வேறு வகையில் ஊக்கப்படுத்தி வருகிறது. இந்த
வாய்ப்புகளை சரிவர பயன்படுத்தி கொள்ள வேண்டும்.
நானோ ஆராய்ச்சியாளர்கள், புதிய தொழில்நுட்பத்தை பயன்படுத்தி நானோ சார்ந்த
புதிய பொருட்களை உருவாக்க முன்வர வேண்டும். அதுபோன்று உருவாக்கப்படும்
பொருட்கள், சமூகத்திற்கும், எதிர்கால தலைமுறைக்கும் பயனுள்ளதாக இருக்க
வேண்டும்.இவ்வாறு, தலைவர் கிருஷ்ணராஜ் வாணவராயர் பேசினார்.இதில், மும்பை
'நியூகிளியர் சயின்ஸ்' ஆராய்ச்சி மைய உறுப்பினர் செயலர் அனந்தபத்மநாபன்
உட்பட பலர் பங்கேற்றனர்.இரண்டு நாட்கள் நடக்கும் கருத்தரங்கில், தமிழகம்,
புதுச்சேரி, ஆந்திரா, கேரளா உட்பட நாட்டின் பல்வேறு பகுதிகளை சேர்ந்த
பல்கலைகளிலிருந்து 100 கல்லூரி மாணவர்கள், ஆராய்ச்சியாளர் பங்கேற்று ஆய்வு
கட்டுரைகளை சமர்பித்துள்ளனர். கருத்தரங்கு ஒருங்கிணைப்பாளர் கந்தசாமி நன்றி
கூறினார்.

